திங்கள், 10 பிப்ரவரி, 2014

ABC opinion poll 64-வருட ஆஸ்கார் வரலாற்றில் சிறந்த படமாக சிலம்டாக் மில்லியனர் ? வாக்கெடுப்புக்களை கேலிகூத்தாக்கும் ,,,,


கடந்த மாதம் 64-வதுஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த 64 ஆண்டுகளில் ஆஸ்கார் விருது பெற்றுள்ள படங்களில் சிறந்த படம் எது என்பது குறித்த ஏபிசி இணையதளம் ஓட்டெடுப்பு நடத்தி வருகிறது. இந்த ஓட்டெடுப்பின் முதல் ரவுண்டில் இந்திய படமான சிலம்டாக் மில்லியனர் முதல் இடத்தை பிடித்து  வருகிற 9 ந்தேதி  நடைபெறும் 2-வது கட்ட ஓட்டெடுப்புக்கு செல்கிறது.
ஆஸ்கார் விருது வரலாற்றில் கடந்த 64 ஆண்டுகளில் சிறந்த ஆஸ்கார் வென்ற படமாக 2 படங்கள் போட்டியில் இருந்தன. சில்ம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படமும் நோ கண்ட்ரி பார் ஓல்டு மேன்(No Country for Old Men) என்ற படமும் இருந்தன. இதில் சிலம்டாக் 3058 ஓட்டுக்கள் பெற்று முதல் இடத்தில் இருந்தது நோ கண்ட்ரி 48 ஓட்டுகள் குறைவாக பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தது.

மேலும் இந்த படங்களுடன் கடந்தவருடம் சிறந்த படமாக தேர்வு பெற்ற ஆர்கோ (Argo) தி கிங் ஸ்பிச்(The Kings Speech) டைடானிக்(Titanic) காட்பாதர் (Godfather) லாரன்ஸ் ஆப் அரேபியா(Lawrence of Arabia) மற்றும் ஆல் தெ கிங்ஸ் மேன் (All the King’s Men) உள்பட 32 படங்கள் 2வது ரவுண்டுக்கு தேர்வு பெற்ரன.
6 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வில் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்.

 dailythanthi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக