திங்கள், 10 பிப்ரவரி, 2014

IPL சூதாட்டத்தில் AVM குருநாத் மெய்யப்பன் ஈடுபட்டது நிரூபணம்:


பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு எதிரான சூதாட்டப் புகார் நிரூபணமானது என ஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த  பஞ்சாப்,  உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான விசாரணை குழு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டது< இந்நிலையில், சூதாட்டப் புகார் தொடர்பான முழு விசாரணை அறிக்கையை விசாரணைக்குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அந்த விசாரணை அறிக்கையில்  குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது நிரூபணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ் குந்தராவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.dinamani.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக