திங்கள், 24 பிப்ரவரி, 2014

என்.எஸ்.கிருஷ்ணன் மகன் கிட்டப்பா மரணம் ! 1949ல் வெளியான நல்ல தம்பி படத்தில் நடித்துள்ளார்


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மகன் கிட்டப்பா பெங்களூரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. என்.எஸ்.கிருஷ்ணனின் மூத்த மகனான இவர் டெல்லியில் மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார். 2012ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு தனது மனைவி இந்திராவுடன் பெங்களூரில் வசித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை கிட்டப்பாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசக் கோளாறால் அவதிப்பட்டார். உடனடியாக கிட்டப்பாவின் மனைவி இந்திரா அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் வருவதற்கு அரை மணி நேரம் தாமத மானது. வீட்டிலிலேயே கிட்டப்பாவின் உயிர் பிரிந்தது.
அமெரிக்காவில் இருக்கும் கிட்டப்பாவின் மூத்த மகள் தேன்மொழிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் பெங்களூர் புறப்பட்டு வந்தார். இன்று இறுதி சடங்கு நடக்கிறது.
என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த 1949ல் வெளியான நல்ல தம்பி படத்தில் கிட்டப்பா நடித்துள்ளார். இப்படத்துக்கு அண்ணா கதை வசனம் எழுதினார்.maalaimalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக