திங்கள், 24 பிப்ரவரி, 2014

Subramaniam Swamy: சுனந்தா வாயில் விஷம் ஊற்றி கொலை ; சசிதரூரை தப்ப விட மாட்டேன்

புதுடில்லி: சமீபத்தில் மர்ம முறையில் இறந்த மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா வாயில் விஷயம் ஊற்றி கொல்லப்பட்டுள்ளார் என்றும், இது தொடர்பான விசாரணையில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி திடுக் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் சசி தரூர் காதல் மனைவி சுனந்தா, பிரபல நட்சத்திர ஓட்டலில் மர்ம முறையில் இறந்து கிடந்தார். இவரது மரணம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் தரப்பிலோ, மருத்துவ ரிப்போர்ட்டிலோ எவ்வித சந்தேகமும் நீக்கப்படவில்லை. இவரது மர்மம் நீடித்து வந்தது. இது குறித்து போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சசிதரூர் அளித்த பேட்டியில், தனது மனைவி இறந்த விஷயத்தில் தான் எதையும் மறைக்கவில்லை என்றும், சுனந்தா அன்புக்கினியவர் , மனித நேயமிக்கவர் என்றும் தெரிவித்திருந்தார்.  சசிதரூர் சீக்கிரமா சு. சாமிகிட்ட ரேட் பேசி சரி பண்ணிக்கோ ... இல்லாங்காட்டி கனி மாதிரி களி தின்னனும் ...


இது தொடர்பாக சுப்பிரமணியசாமி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சுனந்தா மரணம் என்பது பலவித சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இவர் இறந்ததும் அவசர, அவசரமாக தகனம் செய்யப்பட்டது ஏன் ? சசி தரூர் இவரது இறப்பு இயற்கையானது தான் என்றும் அவர் சொல்லவில்லையே ? சுனந்தாவின் மூக்கு அழுத்தப்பட்டுள்ளது. அவரது வாயில் ரஷ்ய விஷம் ஊற்றப்பட்டுள்ளது. அவரது அடி வயிற்று பகுதியில் சிறிய காயம் இருந்துள்ளது. இவ்வளவு இருக்கும் போது அவரது மரணம் இயற்கையானதாக இருக்க முடியுமா ? என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளது. கோர்ட்டில் முறையிட்டு விசாரணையை துரிதப்படுத்துவேன். இவ்வாறு திடுக்க தகவலை சாமி கூறியுள் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக