திங்கள், 24 பிப்ரவரி, 2014

யோகா-இயற்கை மருத்துவம் TN secretariat reopens as super-speciality hospital

சென்னை ஒமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இருதயம், பிளாஸ்டிக், நரம்பியல், புற்றுநோய் உள்ளிட்ட 9 முக்கிய நோய்களுக்கு மட்டும் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக குறிப்பிட்ட இந்த நோய்களுக்காக மட்டும் பன்னோக்கு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப் படுபவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
சாதாரண காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வயிற்று வலிகளுக்கு இங்கு சிகிச்சை அளிப்பது இல்லை. ஆனால் இங்குள்ள புறநோயாளிகள் பிரிவிற்கு அதிக அளவில் சாதாரண பிரச்சினைகளுக்கு மக்கள் வருகிறார்கள். அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

புதிய ஆஸ்பத்திரி தொடங்கிய 21–ந்தேதியில் இருந்து இன்று வரை 600 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். முதல் நாளில் 80 பேரும், 2–வது நாளில் 180 பேரும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 20 பேரும், இன்று 300–க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேலும் புற்று நோயாளிகள் 4 பேர் மேல் சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த மருத்துவமனையில் தற்போது சிகிச்சை முழு வதும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சையை இலவசமாக பெறலாம். ஏழை, எளிய மக்களுக்கு தனியார் மருத்துவமனையை விட உயர் சிகிச்சை இங்கு கிடைக்கிறது.
அரசு ஆஸ்பத்திரிகளில் சி.டி. ஸ்கேனுக்கு ரூ. 500–ம், எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு ரூ. 2,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே அளவு கட்டணத்தை இங்கு செலுத்தி சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கலாம். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் கூட குறைந்த கட்டணத்தில் இந்த வசதியை பெறலாம்.
இந்த மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை, மேல் சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்படும் நோயாளி களுக்கு மன அழுத்தம், பயம் ஏற்படக்கூடும். இதனை போக்கி நோயாளிகளை நிலைப்படுத்துவதற்கு இந்த சிகிச்சை மையம் உதவும். யோகா, தியானம், மூச்சு பயிற்சி உள்ளிட்டவை இங்கு கற்று கொடுக்கப்படும்.
இதுதவிர நீர் சிகிச்சை, நீராவி குளியல், அக்குபிரஷ், அக்குபஞ்சர், களிமண் சிகிச்சை, மசாஜ் தெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்படும். நோயாளிகளுக்கு சுத்தமான, தரமான உணவு தனியாரிடம் இருந்து பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து அதிநவீன தானியங்கி படுக்கைகள் 70 இறக்குமதி செய்யப்பட்டு திவிர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படுகிறது. அதில் டிஜிட்டல் தொடுதிரை உள்ளது. பல்வேறு சிறப்புகள் கொண்ட நவீன உபகரணங்கள் கையாளப்படுகின்றன என்று மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி தெரிவித்தார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக