செவ்வாய், 21 ஜனவரி, 2014

விளம்பரத்துக்காக வீதியில் போராடுகிறார் கேஜ்ரிவால்: பேஸ்புக் ஆதரவு LIKE கிடுகிடு சரிவு


பேஸ்புக்கில் ஆதரவாளர்களை வேகமாக இழக்கும் கெஜ்ரிவால்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விளம்பரத்துக்காகவே வீதியில் இறங்கி போராடுவதாக, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சாடியுள்ளார்.
சென்னையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து அவர் கூறும்போது, "இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் மற்றும் இரு அரசுகளிடையே விரைவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும்" என்றார்.
மாநிலங்களவைத் தேர்தல் குறித்து கேட்டதற்கு, இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்றார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தி வரும் தர்ணா குறித்து கருத்து தெரிவித்த அவர், "டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் விளம்பரத்துக்காக சாலைக்கு வந்து போராட்டம் நடத்துகிறார். இது தவறான முன்னுதாரணமாகும்" என்றார் ஜி.கே.வாசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக