செவ்வாய், 21 ஜனவரி, 2014

நஸ்ரியா ஒரு மதவாதியை காதலிக்கிறாரா ? எனக்காக தன்னை தியாகம் செய்ய தயாராகவும் இருக்க வேண்டும்.காதலன் பகத்

என்னை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். எனக்காக தன்னை தியாகம் செய்ய தயாராகவும் இருக்க வேண்டும். அதுமாதிரி ஒரு பெண்ணை தேடி வந்தேன். இறுதியில் அப்படிப்பட்டவராக நஸ்ரியாவை கண்டு பிடித்தேன்
நடிகை நஸ்ரியாவும், இயக்குனர் பாசிலின் மகனும் நடிகருமான பஹத் பாசிலும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் ‘எல் பார் லவ்’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இவர்கள் காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டு திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆகஸ்டு மாதம் திருமணம் நடக்கும் என்று பகத்பாசில் தந்தையும் பிரபல மலையாள டைரக்டருமான பாசில் அறிவித்து உள்ளார். கேரளாவில் இத்திருமணம் நடைபெறும் என்றும் பெற்றோர்கள் நிச்சயம் செய்து இந்த திருமணத்தை நடத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.


நஸ்ரியாவுடன் காதல் மலர்ந்தது பற்றி பஹத் பாசில் கூறும்போது,

நஸ்ரியாவுக்கும் எனக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. நஸ்ரியாவிடம் நான் மயங்கி விட்டேன். அவரது காதல் என்னை மாற்றி விட்டது. என் குடும்பத்தினருக்கும் நஸ்ரியாவை மிகவும் பிடித்துள்ளது. நஸ்ரியாவோடு நான் உரையாடினேன். அப்போது காதல் வயப்பட்டேன்.

என்னை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். எனக்காக தன்னை தியாகம் செய்ய தயாராகவும் இருக்க வேண்டும். அதுமாதிரி ஒரு பெண்ணை தேடி வந்தேன். இறுதியில் அப்படிப்பட்டவராக நஸ்ரியாவை கண்டு பிடித்தேன். நஸ்ரியாவை கடைசி வரை காதலிப்பேன். கடைசி வரை நன்றாக பார்த்து கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக