செவ்வாய், 21 ஜனவரி, 2014

கெஜ்ரிவால் தர்ணா போராட்டம் வாபஸ் ! அரசு மீது பழி போட்டு கெஜ்ரிவால் நாடகம் ! லாலு கண்டனம்

திங்கள்கிழமை முதல் நடைபெற்ற போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தார். டெல்லி துணை நிலை ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னர் இதனை அறிவித்தார்.புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத 4 போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் சம்மந்தப்பட்ட 4 போலீஸ்காரர்களையும் விசாரணை முடியும் வரை விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து தனது ஆம் ஆத்மி கட்சி தனது போராட்டத்தை முடித்துக்கொண்

டெல்லியில் முதல் அமைச்சர் கெஜ்ரிவால் நடத்திய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத், கெஜ்ரிவால் நாடகம் அரசியல் அமைப்பையே குலைத்து விட்டது என்று கூறியுள்ளார்.
லாலு பிரசாத் யாதவ், நாட்டில் இப்போது எல்லோரும் பிரதமராக ஆசைப்படுகிறார்கள்.
டெல்லி, நாட்டின் தலைநகர். அங்கு கெஜ்ரிவால் நடத்திய போராட்டத்தை பார்த்து, டெல்லி நகர மக்கள் மட்டும் அல்ல நாட்டின் பிறபகுதி மக்களும் எள்ளி நகையாடுகிறார்கள். பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திதான் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும்,  கெஜ்ரிவால் நடவடிக்கைகளின் பின்னணியில் பெரிய சூழ்ச்சி உள்ளது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மீது பழி போட்டு, தங்களை பலப்படுத்திக் கொள்ள பார்க்கிறார்கள். காங்கிரசை பலவீனமாக்க, அது ஒன்றும் மதவாத கட்சி அல்ல. கெஜ்ரிவாலின் நாடகம் அரசியல் அமைப்பையே சீர்குலைத்து விட்டது. அவர் அளித்த வாக்குறுதிகளுக்காகத்தான், மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். அவற்றை நிறைவேற்ற முடியாததால் அவர் சாலையில் இறங்கி போராட தொடங்கி விட்டார் என்று அவர் கூறியுள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக