வியாழன், 2 ஜனவரி, 2014

சட்டமன்ற வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி ! கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் வைத்த ‘செக்’

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.  ஆம் ஆத்மி கட்சி அரசு மீது இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.   அதில், ஆம் ஆத்மி காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவை பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது.>நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. அர்விந்தர் சிங் லவ்லி பேசியபோது,திரும்பவும் தேர்தல் நடப்பதை விரும்பாததால், நாங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கிறோம். இன்று சபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரசின் 8 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவாக வாக்களிப்பார்கள். ஆனால், ஆம் ஆத்மி கட்சி முக்கிய முடிவு எடுக்கும் விசயங்களில் அவசரப்படக்கூடாது. மக்கள் நலனை கருத்தில்கொண்டு முடிவு எடுக்கிறவரை டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆபத்து இருக்காது’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக