வெள்ளி, 3 ஜனவரி, 2014

ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் தேவயானியின் தந்தை உட்பட 25 பேர் முறைகேடான வழியில் ஒதுக்கீடு

மும்பை: கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்காக மும்பையில் ஆதர்ஷ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.  இதில், அரசியல்வாதிகள், ராணுவ மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முறைகேடாக ஒதுக்கீடு பெற்றனர். இது தொடர்பாக நீதி விசாரணை  நடத்தப்பட்டது. அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், அரசு உயர் அதிகாரிகள், முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், விலாஸ்ராவ் தேஸ்முக்,  சுஷில் குமார் ஷிண்டே உட்பட அரசியல்வாதிகள் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை மகாராஷ்டிரா அரசு கடந்த மாதம் 20ம்  தேதி நிராகரித்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இதனால் அமைச்சரவை முடிவை மறுபரிசீலனை செய்ய மகாராஷ்டிரா அமைச்சரவை முடிவு செய்தது. நீதி விசாரணை குழுவின் அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான பரிந்துரைகளை மகாராஷ்டிரா அரசு நேற்று ஏற்றுக் கொண்டது. அதன்பின் பேட்டியளித்த முதல்வர் பிருத்விராஜ்  சவான் கூறியதாவது:ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தேவயானியின் தந்தை உட்பட 25 பேர்  முறைகேடான வழியில் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அந்த ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும். முறைகேடான வழியில் வீடுகளை ஒதுக்கும்படி அரசியல்  தலைவர்கள் சிலர் பரிந்துரை செய்ததாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இந்த  வழக்கில் சிபிஐ ஏற்கனவே எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதால், மகாராஷ்டிரா அரசு சார்பில் புதிய எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாது. இவ்வாறு சவான்  கூறினார் dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக