வியாழன், 2 ஜனவரி, 2014

பாக்., மாஜி அதிபர் முஷாரப் மாரடைப்பு காரணமாக அவசர சிகிச்சை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மாரடைப்பு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இவரது நிலை தற்போது முன்னேற்றமடைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1999 முதல் 2008 வரை ராணுவ ஆட்சி செலுத்தி வந்த முஷாரப், தேர்லுக்கு பின்னர் முஷாரப் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார். பின்னர் பாகிஸ்தானுக்கு வந்த போது நாட்டில் தேசதுரோகம் செய்தது மற்றும் பல்வேறு கிரிமினல் வழக்குகள் அடிப்படையில் கைது செய்ப்பட்டார். தற்போது முஷாரப் போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர். இன்று ராவல்பிண்டி கோர்ட்டில் ஆஜராகவேண்டியது. இவருக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கோர்ட்டுக்கு கொண்டு வரும் வழியில் இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இந்நிலையில் முஷாரப்புக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தற்போது முஷாரப் சுய நினைவுடன் இருப்பதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக