செவ்வாய், 21 ஜனவரி, 2014

ஈரோடு கல்லூரி பேராசிரியை கொலையில் சேலம் வாலிபர் கைது

இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தீபா கொலை செய்யப்பட்ட இடத்தில் ரத்தக்கறை படிந்த கத்தி கிடந்தது. இதை போலீசார் கைப்பற்றினர்.
இந்த நிலையில் தீபா கொலை வழக்கில் துப்பு துலங்கி உள்ளது. இகுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கல்லூரி பேராசிரியை தீபாவுக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அந்த வாலிபரின் நண்பர் கண்டித்துள்ளார்.
தீபாவிடமும், தனது நண்பரின் தொடர்பை துண்டித்து விடும்படி எச்சரித்துள்ளார். ஆனால் தீபா, அவரது பேச்சை கேட்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், நேற்று இரவில் தீபா வீட்டு அருகே நின்று கொண்டு இருந்தார். தீபா வருவதை பார்த்த அவர், நைசாக தீபாவை அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தாக கூறப்படுகிறது.
சேலத்தை சேர்ந்த அந்த வாலிபர் சிவக்குமார் என்பது தெரிய வந்தது. அவர் இன்று காலை சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
malaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக