திங்கள், 20 ஜனவரி, 2014

மெஹர் தரார் : கணவன்–மனைவி சண்டையில் என் காதல் ஏன் வந்தது?’


இஸ்லாமாபாத்,
முதலில் சசி தரூர்– சுனந்தாவின் இடையே நுழைந்து, இப்போது சுனந்தாவின் மரணத்துக்கு பின்னணியாக பேசப்படுகிறவர் பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரார். பரபரப்பான இந்த தருணத்தில் அவர் பாகிஸ்தானின் ‘ஜியோ தேஜ்’ டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அதில் அவர், ‘‘சசி தரூரை கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் சந்தித்தேன். ஜூன் மாதம் துபாயில் சந்தித்தேன். எங்களுக்கு இடையே இரண்டே சந்திப்புகள்தான். அவரைப்பற்றி நான் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். தனக்கு தெரியாத இன்னொரு பெண், தன் கணவரைப்பற்றி புகழ்ந்து எழுதியது அனேகமாக சுனந்தாவுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அதனால் என்னுடன் பேச வேண்டாம் என சசி தரூரிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் அதைக்கேட்காமல், ‘டுவிட்டரில்’ தொடர்ந்தார்.
அதன்பின்னர்தான் என்னை அவர் பின்தொடர்வதை நிறுத்த வேண்டும் என்று ‘டுவிட்டரில்’ சுனந்தா கூறினார்’’ என்றார் மெஹர்.
தொடர்ந்து அவர், ‘‘சதி செய்து என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். இங்கு ஒரு பாகிஸ்தான் பெண் உட்கார்ந்து கொண்டு, அவர்களது திருமண வாழ்வை கெடுத்து விட முடியாது’’ என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, சுனந்தா சாப்பிடாமல் கொள்ளாமல், தொடர்ந்து அளவு கடந்து சிகரெட் பிடித்துக்கொண்டே இருந்ததாகவும், வயிற்று எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தார். ‘இதைத்தான் அல்ல, இந்திய ஊடகங்கள்தான் சொல்கின்றன’ என்றும் கூறினார்.
கடைசியாக அவர் கேட்டது, ‘‘சுனந்தா தனது கணவருடன் சண்டை போட்டார்; அவரது உடல் நலம் பாதித்தது. இதில் எனது காதல் கதைக்கு என்ன தொடர்பு இருக்கிறது?’’ என புலம்பினார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக