வியாழன், 2 ஜனவரி, 2014

கொல்கத்தாவில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களே தீயிட்டு கொளுத்தினர்

கொல்கத்தா: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியை குற்றவாளிகளே தீயிட்டு கொளுத்தியதாக போலீசார் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 16 வயது பள்ளி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் மீண்டும் மாணவியை பலாத்காரம் செய்தது. புகாரை திரும்பபெறக் கோரி தொடர்ந்து விரட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி மாணவி தீ கொளுத்தி தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


சிகிச்சை பலனின்றி அவர் டிசம்பர் 31ம் தேதி இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவியின் தந்தை மருத்துவமனை நிர்வாகம் மீதும், முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பொய் என்று மறுத்துள்ளனர். அவர் மீது குற்றவாளிகள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக