ஞாயிறு, 26 ஜனவரி, 2014

நடிகை பியாவுக்கு மீண்டும் ஒரு சான்ஸ் கிடைத்திருக்கிறது

வாய்ப்புகள் இல்லாமல் காத்திருந்த நடிகை பியாவுக்கு மீண்டும் ஒரு சான்ஸ் கிடைத்திருக்கிறது. பொய் சொல்லப்போறோம், கோ, பலே பாண்டியா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பியா. ஆரம்ப கட்டத்தில் ஹீரோயினாக நடித்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் வராததால் 2 வது ஹீரோயினாக நடித்து வந்தார். புதுமுக ஹீரோயின்கள் போட்டியால் அந்த வாய்ப்புகளும் கைநழுவிப் போனது.  சிறிது இடைவெளிக்கு பிறகு தமிழ், மலையாளத்தில் உருவாகும்  புதிய படத்தில் நடிக்கிறார் பியா. த்ரில்லர் படமான இதை ஹாசிம் மரிகர் எழுதி இயக்குகிறார். இயக்குனர் வாழ்க்கையிலும், மற்றொரு பழம்பெரும் நடிகையின் வாழ்க்கையிலும் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பில், பார்த்திபன் பிரதான வேடத்தில் நடிக்க உள்ளார். மற்றபடி மலையாளத்தில் நடிக்கும் மனோஜ் கே.ஜெயன், மும்தாஜ், சுவேதா மேனன் போன்ற நட்சத்திரங்களே தமிழிலும் நடிக்கிறார்கள். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக