ஞாயிறு, 26 ஜனவரி, 2014

வழமையாக ஆட்களைக் கொல்வதற்குப் புலிகள் பயன்படுத்தும்


புலிகளின் வதை முகாமில் எனது அனுபவம் - தோழர்  மணியம் எழுதும் தொடர் – 118
பொதுவாக வெளியே கூட்டிச் செல்லப்படுபவர் குறித்து அங்கிருப்பவர்களுக்கு ஏற்படும் முதல் சிந்தனை அவர் கொல்லப்பட கொண்டு செல்லப்படுகிறார் என்பதே. அதன்பிறகுதான் அவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறார்கள் அல்லது விடுதலை செய்யப்படுகிறார்கள் என்பது பற்றிச் சிந்திக்கத் தோன்றும்.
குண்டுவீச்சு விமானங்களின் வருகையின் பின்னர் புலிகளினால் அவர்களது வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மத்தியில் மட்டுமின்றி புலிகள் மத்தியிலும் பயமும் பதட்டமும் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. அவர்களது பதட்டத்துக்குப் பிரதான காரணியாக இருந்ததுää இந்த முகாம் பற்றிய தகவலை அரச படைகளுக்கு யார் வழங்கியிருப்பார்கள் என்பதாக இருந்திருக்கக்கூடும்.
பொதுவாக சந்தேகம் என்பது ஒரு பயங்கரமான மனநோய். அது ஒருவரைப் பீடித்தது என்றால்ää அவரது வாழ்க்கை சித்திரவதைகள் நிறைந்ததாக மாறிவிடும்.
சாதாரணமாகவே குடும்பங்களில் கணவன் - மனைவி இடையே ஏற்படும் சந்தேகம் தீராத நோயாக வளர்ந்து எத்தனையோ குடும்பங்களின் பிரிவினையில் போய் முடிந்திருப்பதை நாம் அறிவோம்.
இந்த சந்தேகச் சமாச்சாரத்தில் புலிகள் முதலிடத்தில் இருப்பவர்கள். இயக்கத்தை எப்பொழுதும் ஒரு பதட்ட நிலையில் வைத்திருப்பதற்காகவோ என்னவோää ஒருவரை ஒருவர் வேவு பார்க்கும் நடைமுறை புலிகள் இயக்கத்தில் இருந்ததை நான் அவர்களின் பிடியில் இருந்த ஒன்றரை வருடங்களில் அவதானித்து வந்திருக்கிறேன்.
இது புலிகளுக்கு மட்டும் உரித்தான விசேட அம்சமும் அல்ல. ஜேர்மன் நாஜிகளின் தலைவனான கொடுங்கோலன் ஹிட்லர் முதல் உலகின் பிரபலமான சர்வாதிகாரிகள் எல்லோருமே தமது அணியில் இருப்பவர்களையே வேவு பார்க்கும் நடைமுறைகளைக் கைக்கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் வழமைக்கு மாறான முறையில் ஆட்சி அதிகாரத்தை நடாத்துவதால்ää தமது நிழலைக் கண்டே அஞ்சுபவர்களாகத்தான் இருந்தார்கள்.
இந்த குண்டு வீச்சு விமானங்களின் வருகையின் பின்னணியில் புலிகளுக்கு எழுந்த சந்தேகம் கூடுதலான மனப் பீதியையும் மன உளைச்சலையும் நிச்சயமாகக் கொடுத்திருக்கக்கூடும். ஏனெனில் தமது எதிரிகள்தான் தமது முகாம் பற்றிய தகவலை இராணுவத்துக்கு வழங்கி இருப்பார்கள் என்ற ஒற்றைக் கண்ணோட்டத்தில் மட்டும் அவர்கள் சிந்தித்திருக்கமாட்டார்கள். இன்னொரு கோணத்திலும்ää அதாவது தமது அணியில் இருப்பவர்கள்தான் யாராவது தகவல் கொடுத்திருப்பார்களோ என்ற கண்ணோட்டத்திலும் பார்த்திப்பார்கள்.
ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவெனில்ää புலிகளுக்குள் ஒருவரில் ஒருவருக்குச் சந்தேகம் இருப்பதால்ää அவர்களது சந்தேகங்களை சாதாரணமாக இயக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரிடமும் விவாதித்துவிட முடியாது. எனவே சந்தேகம் ஒரு புற்றுநோய் போல மேலும் மேலும் வளரவே செய்யும்.
குண்டுவீச்சு விமானங்கள் வந்துபோன பின்னர் சில நாட்களாக முகாம் பொறுப்பாளர் காந்தியின் பிரசன்னம் அங்கு காணப்படவில்லை. ஆனால் வேறு சில வெளியிடத்துப் புலிகள் வந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்களது புலனாய்வுப் பிரிவு தலைவன் பொட்டம்மானும் ஒருமுறை வந்து போனான்.
அடுத்து வந்த சில நாட்களில் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் புலிகளின் முக்கியஸ்தர்கள் மாற்று இயக்க முக்கியஸ்தர்கள் எனச் சிலர் இரவோடு இரவாக வேறு இடங்களுக்கு (சிலவேளைகளில் அவர்களின் கதையை முடிப்பதற்காகவும் இருக்கலாம்) கொண்டு செல்லப்பட்டனர். புதிதாகக் கொண்டு வரப்படுபவர்களின் தொகையும் குறைந்துபோய் விட்டது.
இப்படியான ஒருசு10ழ்நிலையில் ஒருநாள் இரவு 11 மணி அளவில் எம்மைத் தடுத்து வைத்திருந்த அறை வாசலுக்கு வந்த சில புலிப் பலனாய்வாளர்கள் எனதும்ää எமது ஏனைய மூன்று தோழர்களினதும் பெயர்களையும்ää எமது இலக்கங்களையும் குறிப்பிட்டு அழைத்தனர். அவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் நான் போக தோழர்கள் இரத்தினம்ää கதிர்காமநாதன் சந்திரன் ஆகியோர் ஏனையோராவர். எம்மை வெளியே போவதற்குத் தயாராகும்படி கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
நாம் அங்கிருந்த நிலைமையில் வெளியே போவதற்கு ‘தயாராவது’ என்பதுää கதவுக்கு வெளியே நடந்து போவது மட்டுமேதான். ஆம் அதுமட்டுமேதான். மற்றும்படி வீடுகளில் நாம் வெளியே போகும் போது செய்வது போலää முகம் கழுவிää தலைவாரி பவுடர் பூசி உடைகளை மாற்றிப் புறப்படுவது அல்ல. இங்கு அவர்கள் தடுத்து வைத்திருப்பவர்களுக்கு கட்டுவதற்கு எனத் தந்த சிவப்புத் துணியில் வெள்ளைப் பூப்போட்ட (‘அடிகாயங்களால் ஏற்படும் இரத்தக் கறைகளை மறைப்பதற்காகத்தான் அந்த நிறத்தில் சாரங்களைச் தெரிவு செய்திருக்கிறார்கள் போலும்’ என ‘தீப்பொறி’ இயக்கத் தோழர் நோபேர்ட் ஒருமுறை நகைச்சுவையாகச் சொன்னது ஞாபகம் வருகிறது) சாரத்தைத் தவிர எம்மிடம் வேறு உடமைகள் எதுவும் கிடையாது.
‘வெளியே போகத் தயாராகும்படி’ அவர்கள் சொன்னதும்ää எமது மனதில் இந்த உலகை விட்டே போகப் போகிறோமா என்ற கேள்விதான் முதலில் எழுந்தது. எமது அச்சத்தை உடனடியாகவே அங்கிருந்த ஏனையோரும் பகிர்ந்து கொண்டனர். ஏனெனில் அங்கிருக்கும் ஒருவரை வெளியே கூட்டிச் செல்வது என்பது பல அர்த்தங்களைக் கொண்டது.
பொதுவாக வெளியே கூட்டிச் செல்லப்படுபவர் குறித்து அங்கிருப்பவர்களுக்கு ஏற்படும் முதல் சிந்தனை அவர் கொல்லப்பட கொண்டு செல்லப்படுகிறார் என்பதே. அதன்பிறகுதான் அவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறார்கள் அல்லது விடுதலை செய்யப்படுகிறார்கள் என்பது பற்றிச் சிந்திக்கத் தோன்றும். ஆனால் இந்த ராங் - 2 (Tank – 2) என்ற பெயர் கொண்ட ஆனைக்கோட்டை வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் எல்லோருமே புலிகளைப் பொறுத்த மட்டில் ‘பயங்கரக் குற்றவாளிகள்’ என்றபடியால் அங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்படுபவர்கள் நேரடியாக விடுதலை செய்யப்படுகிறார்கள் என அங்கிருக்கும் யாரும் எண்ணுவதில்லை.
சிறிது நேரத்தில் நாங்கள் நால்வரும் வெளியே எடுக்கப்பட்டோம். உள்ளே எம்முடன் ஆறு மாதங்களாக உடன்பிறப்புகளாகப் பழகி வாழ்ந்த அனைத்து உள்ளங்களும் கண்ணீர்மல்க எமக்கு ‘விடை’ தந்தனர். வெளியே வந்ததும்  விராந்தையில் உள்ள அலுமாரி ஒன்றைத் திறந்த புலிகளில் ஒருவன் நாம் அங்கு பிடித்து வரப்பட்ட போதுää அணிந்து வந்திருந்த உடைகளை தேடியெடுத்து அணியுமாறு கட்டளையிட்டான். (நாம் பிடித்து வரப்படும் பொழுது கொண்டு வரும் ‘சொத்துகளான’ சாரம்ää சேர்ட்ää பெனியன்ää உள்ளாடை என்பன அந்த அலுமாரிக்குள்தான் வைக்கப்படுவது வழமை.) ஒருவாறு எமது உடைகளைத் தேடியெடுத்து அணிந்து கொண்டோம்.
அதன்பின்னர் எமது கண்கள் கறுப்புத் துணிகளால் கட்டப்பட்டுää கைகளைப் பிடித்து வெளி முற்றத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டோம். எங்களை நான்கு சைக்கிள்களில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள். சைக்கிள் கற்கள் நிறைந்த கிரவல் ஒழுங்கையால் போவதை உணர்ந்தேன். சிறிது நேரத்தில் தார் போட்ட வீதி ஒன்றில் ஏறித் தொடர்ந்து செல்லத் தொடங்கியது.
இதற்கிடையில் என்னை ஏற்றிச் சென்ற மெய்யப்பன் என்பவன் (அவன்தான் அந்த வதை முகாமின் பிரதான ‘வைத்திய அதிகாரி’. அவன் பின்னர் ஒரு இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக அறிந்தேன்) என்னை நோக்கிää “என்ன மணியண்ணை உங்களை எங்கை கொண்டு போறம் எண்டு தெரியுமோ?” எனக் கேட்டான்.
நான்ää “தெரியல்லை” என்று பதிலளித்தேன்.
அவன் மெதுவாகச் சிரித்துவிட்டு “இனி நீங்கள் சுதந்திரமாக இருக்கப் போறியள்” என்று சொன்னான்.
“ஆ..” என நான் பிரதிபலித்தேன். அது மகிழ்ச்சியா அல்லது துக்கமா என்பது எனக்கே தெரியவில்லை.
அதன் பின்னர் அவன் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவன் அப்படிக் கேட்டதும் ‘சுதந்திரமாக இருக்கப் போறியள்’ என்று சொன்னதும்ää பலவிதமான சிந்தனைகளையும் சந்தேகங்களையும் எனக்குள் கிளறிவிட்டுவிட்டது. அவன் என்ன அர்த்தத்தில் அப்படிச் சொன்னான் என எண்ணினேன். ‘ஒருவேளை எமக்கு இந்த உலகிலிருந்தே நிரந்தரமாக விடை கொடுக்கப் போகிறார்களோ என எண்ணினேன். அதைத்தான் சுதந்திரம் என்ற பரிபாசையில் சொன்னானோ?’.
ஆனாலும் வழமையாக ஆட்களைக் கொல்வதற்குப் புலிகள் பயன்படுத்தும் ‘அலுகோசுகளான’ சின்னமணிää நல்லதம்பி என்ற இருவரும் எம்முடன் வருவதாகத் தெரியவில்லை. சரி அப்படி எதுவும் நடந்தாலும் எம்மால் என்ன செய்துவிட முடியும் என்ற கையறு நிலையை எண்ணி வருந்தினேன்.
சிறிது தூரம் சைக்கிள் ஓடிய பின்னர் ஒரு இடத்தில் நிறுத்தி எமது கண்களுக்குக் கட்டியிருந்த கறுப்புத் துணிகளை அவிழ்துவிட்டனர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வெளி உலகத்தையும்ää அந்த நள்ளிரவு நேரத்தில் சைக்களில் சென்ற இரண்டொருவரையும் பார்த்ததும்ää மனதில் ஒரு இனம்தெரியாத மகிழ்ச்சியும்ää ஒரு புதிய உலகத்தில் இருப்பது போன்றதான பிரமையும் ஏற்பட்டது. ஆனால் அந்த இடம் எது என்பதை அடையாளம் காண முடியவில்லை.
மீண்டும் எமது பயணம் (என்ன பயணமோ என்பது நிச்சயமாகவில்லை) ஆரம்பமானது. சிறிது தூரம் சென்றதும் பலாலி வீதியில் அமைந்திருந்த இலங்கைப் பிராந்திய சபையின் (இ.போ.ச) கோண்டாவில் சாலையைக் (டிப்போ) கண்டதும் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இடம் எது என்பது புரிந்தது. ஆனால் எதற்காக இவர்கள் கோண்டாவில் வீதியால் பலாலி நோக்கிக் கொண்டு செல்கிறார்கள் என்பது விளங்கவில்லை. அதை அவர்களிடம் கேட்கவும் முடியாது.bus depot
சுமார் அரை மணித்தியாலம் ஓடிய பின்னர் சைக்கிள்கள் ஊரெழுச் சந்தியிலிருந்து உள் பாதையொன்றுக்குள் திரும்பிச் சிறிது தூரம் சென்று நின்றன. பின்னர் கேற்றைத் திறந்து எம்மை உள்ளே கூட்டிச் சென்றனர். ஆனி மாத வளர்பிறை நிலவொளியில் அந்த காணி நிறைய நின்றிருந்த ஓங்கி உயர்ந்த வாழை மரங்கள் “உங்களைத்தான் பார்த்திருந்தோம். வாருங்கள்…வாருங்கள்” என வரவேற்பது போல காற்றில் தமது இலைகளை விசிறி வரவேற்பது போல வரவேற்றன.
சிறிது நேரத்தில் அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் கூட்டிச் செல்லப்பட்டோம். அங்கு இருந்த ஒரு இளைஞனிடம் எம்மைக் கூட்டி வந்தவர்கள் எம்மை ஒப்படைத்துவிட்டுää அதற்கு அத்தாட்சியாக ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு திரும்பிப் போவதற்குப் புறப்பட்டனர். எம்மைப் பார்த்து அவர்கள் எதுவுமே சொல்லவில்லை.
அங்கு எம்மைப் பொறுப்பெடுத்தவனின் பெயர் சுபாஸ் என்பதை அவர்களது உரையாடல்களிலிருந்து தெரிந்து கொண்டோம்.
அவன் எங்களைப் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டுää “எல்லாரும் சாப்பிட்டிட்டியளோ?” என்று கேட்டான்.
நாங்கள் “ஓம்” என்று சொன்னோம்.
“சரி இப்ப நீங்கள் படுங்கோ. கொஞ்சநாள் இங்கை இருந்திட்டு வேறை ரு இடத்துக்குப் போகவேண்டி வரும்” என்று சொல்லிவிட்டு யாரையோ அழைத்தான்.
அவனது அணுகுமுறை எமக்குச் சற்றுத் தெம்பளிப்பதாக இருந்தது. கடந்த ஆறு மாதங்களாக கரடு முரடான கல் பாதையில் சென்ற எமது வண்டிää சற்று மிருதுவான பாதையில் பணயிக்கத் தொடங்கியிருப்பது போலத் தோன்றியது. இருந்தாலும் புலியின் குகையில் இருக்கும் வரை எதையும் அதீதமாகக் கற்பனை செய்து கொள்ளக்கூடாது என மனம் எச்சரித்தது.
தொடரு thenee.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக