சனி, 25 ஜனவரி, 2014

அழகிரி:போட்டி வேட்பாளரே தேவையில்லை. தானாகவே தோற்றுவிடுவார்கள். சென்னையில் குவிந்த தென் மாவட்ட திமுக நிர்வாகிகள்


திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,

ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு நான் வந்தவுடன், உங்கள் ஆதரவாளர்கள் 5 பேரை நீக்கியிருக்கிறார்கள்
என்று சொன்னார்கள். யார் யார் என்று பெயர் கேட்டேன். அந்த 5 பேர் பெயரை சொன்னார்கள். ஹாங்காங் போகுவதற்கு முன்பே, அதில் நீக்கப்பட்ட கொட்டாம்பட்டி ராஜேந்திரன் என்பவர் பல மனுக்கள் கொடுத்திருந்தார். பல முறைகேடுகள் நம்முடைய கட்சியில், தேர்தல்களில் நடந்திருக்கிறது என்று என்னிடம் மனு கொடுத்திருந்தார். அதை நான் தலைவரிடம் கொடுத்தேன். உடனே விசாரிப்பதாக ஒரு மாயையை ஏற்படுத்தினர். ஆனால் அதுபற்றி விசாரிக்கவில்லை. பல ஆதாரங்களை நான் இப்போது சொல்ல மாட்டேன். மதுரையில் 31ஆம் தேதி பிரஸ் மீட் வைத்திருக்கிறேன். அங்கே சொல்லுவேன். ஆகவே ஜனநாயகம் இதில் செத்திருச்சு. அதுதான் இப்போது நான் சொல்ல முடியும். நியாயம் கேட்க போனதற்கு கிடைத்த பரிசு. அப்படி என்று நான் நினைக்கிறேன். பத்திரிகைகள் எழுதுவது பற்றி எனக்கு கவலைக்கிடையாது என்றார்.


கேள்வி: உங்கள் கட்சிதான் சொல்லியிருக்கிறது குழப்பம் விளைவிக்கிறமாதிரி போஸ்டர் ஒட்டிருக்கிறார்கள் என்று?
பதில்: அது என்ன குழப்பம் என்று சொல்ல சொல்லுங்கள். போஸ்டர் ஒட்டக் கூடாது என்று சட்டம் இருக்கா என்ன? என்னை ஆதரித்து போஸ்டர் ஒட்டுவது தப்பா? சிஎம் என்று ஒட்டுறாங்களே. அதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. வருங்காலமே என்று ஒட்டுகிறார்களே. வருங்கால தலைவரே என்று ஒட்டுகிறார்களே தலைவர் இருக்கும்போது. அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
கேள்வி: மு.க.ஸ்டாலின் தலைமையை நீங்கள் ஏற்காதது தான் உங்கள் நடவடிக்கைக்கு காரணமா?
பதில்: அதெல்லாம் எனக்கு தெரியாது. அவங்க ஏற்கனவே என்னை எடுக்கனும்னு பிளான் பண்ணிருக்காங்க. அவ்வளவுதான். தலைவரைதான் கேட்க வேண்டும்.
கேள்வி: திமுகவில் உங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாவிட்டால், தனித்துப் போட்டியிடுவீர்களா?
பதில்: நான்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். போட்டியிடப்போவதில்லை.
கேள்வி: 2000-ம் ஆண்டு நீங்கள் திமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது மதுரை திமுகவில் பெரிய பிரச்சனையாக இருந்தது.
பதில்: போட்டி வேட்பாளரே தேவையில்லை. தானாகவே தோற்றுவிடுவார்கள்.
கேள்வி: திமுகவுக்கு எதிராக நீங்கள் நடந்ததாக கூறுகிறார்களே?
பதில்: திருப்பி திருப்பி கேட்டால் என்ன கூறமுடியும். நியாயத்திற்காக போராடினேன். அதற்கு கிடைத்த பரிசு நீக்கம். அவ்வளவுதான். இவ்வாறு பேட்டி அளித்தார் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக