சனி, 25 ஜனவரி, 2014

பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: புன்னகை, பாமா விஜயம், இருகோடுகள் உள்பட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி (68). இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது இடுப்பு எலும்பில் லேசான பிளவு ஏற்பட்டது. பாத்ரூமில் இருந்த கூரான ஒரு பொருள் அவரது இடுப்பு எலும்பில் குத்தியதில் காயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அவரை சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கூறினர். இதுபற்றி ஜெயந்தி மகன் கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘அம்மாவுக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பயப்படும்படியான அளவுக்கு பெரிய காயம் இல்லை என்று டாக்டர்கள் கூறினர். சில நாள் ஓய்வுக்கு பிறகு அவரால் பழையபடி நடக்க முடியும்’ என்றார். இதுபற்றி அறிந்த கன்னட நடிகர்கள், ஜெயந்தி வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தனர்tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக