ஞாயிறு, 19 ஜனவரி, 2014

சுனந்தா டுவிட்டர் : வாதாட வைக்காதீர்கள். கெஞ்ச வைக்காதீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன் சசி.


புதுடெல்லி, சுனந்தாவுடனான 3 ஆண்டு கால மண வாழ்க்கைக்கு மத்தியில், சசிதரூர் மீது பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கு ஏற்பட்ட காதல் மயக்கம்தான், சுனந்தாவின் உயிரைப் பறித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
‘டுவிட்டர்’ பதிவுகள்
சசி தரூருக்கும், மெஹர் தராருக்கும் இடையேயான காதல் மயக்கம் பற்றிய தகவல்கள், சுனந்தா தரூர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுத்தான் வெளியுலகுக்கு தெரிய வந்தது.
அதை மெஹர் தரூர் மறுத்திருக்கிறார். தொடர்ந்து சம்மந்தப்பட்ட மூவர் இடையே ‘டுவிட்டர்’ வழியாக வார்த்தைப்போர் நடந்து வந்திருக்கிறது.
இந்த நிலையில், தாங்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருவதாகவும், ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் உருவான சர்ச்சை தகவல்களால் தாங்கள் மனவருத்தம் அடைந்திருப்பதாகவும் சசி தரூர்– சுனந்தா கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
‘விடைபெறுகிறேன்’
ஆனால் சுனந்தாவிற்குள் ஆற்ற முடியாத மனவேதனை இருந்து இருக்கிறது. இதை கடந்த சில நாட்களில் அவர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவுகள் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளன. அதில் இருந்து ஒரு தொகுப்பு இது:–
* விதிப்படி எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும். நான் சிரித்துக்கொண்டே விடைபெறுகிறேன்.
* இது ஒரு அந்தரங்க விவகாரம் (மெஹர் தரர் விவகாரம்). இது ஏன் தலைப்புச்செய்தி ஆக்கப்படுகிறது? மெஹர் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது 5 நிமிட பிரபலத்தால் எனக்கு எல்லா பிரச்சினைகளும் வந்து சேர்ந்திருக்கின்றன.
* இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் ஆண் அல்ல. மனைவி சிகிச்சைக்கு வெளியே சென்றபோது, ஆணை வீழ்த்தியவர் பெண்தான். எவ்வளவு மோசம்!
* எனது கணவர் அவளுடன் இருக்க விரும்புகிறார். கடைசியாக நான் ஒருவள்தான் தடுத்து நிறுத்த வேண்டும்.

‘உங்களை நேசிக்கிறேன் சசி’
* மெஹர் முழுப்பொய் சொல்கிறார். நான் பொய் சொல்ல மாட்டேன். தற்போது நான் உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் ஒரு நாள் பேசுவேன். அது மெஹருக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக அமையும்.
* ஒரு பெண்ணின் துடுக்குத்தனம், வெறித்தனமாக ஒரு இந்தியருடன் காதலை ஏற்படுத்துமா? சசி, தயவு செய்து என்னை வாதாட வைக்காதீர்கள். கெஞ்ச வைக்காதீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன் சசி.
இவ்வாறு சுனந்தா கடைசி நாட்களில் ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் எழுதி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக