செவ்வாய், 10 டிசம்பர், 2013

நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் MGR ரின் ஆயிரத்தில் ஒருவன்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் முக்கியமான படமாகும்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிப்பில்  1965-ல் வெளியான ” ஆயிரத்தில் ஒருவன்” நவீன டிஜிட்டல் தொழில் நுட்டப்த்தில் மீண்டும் வெளியாகிறது.அதோ அந்த பறவை போல, நாணமோ இன்னும் நாணமோ, ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ, பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஏன் என்ற கேள்வி போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து இன்றைக்கும் விரும்பி கேட்கப் பட்டு வருகிறது. சூப்பர் ஹிட் பாடல்களும் சிறந்த நடனங்களும் சண்டைகாட்சிகளும்  நிறைந்த இந்த படத்தில் தான் ஜெயலலிதா முதன் முதலில் எம்.ஜிஆருடன் இணைந்து நடித்தார் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது.
இயக்குனர் பி.ஆர் பந்துலு இயக்கத்தில் உருவான இப்படம்  1965 ஜூலை 9 ந்தேதி வெளியானது.இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி. படத்தில் நாகேஷ்,எம்.என்.நம்பியார்,ஆர்.எஸ்.மனோகர்,மாதவி  உள்பட பலர் நடித்து உள்ளனர்.எப்போது எம்.எம்.ஜி.ஆர் படம் மீண்டும் ரிலீசானாலும் தியேட்டர்கள் நிரம்பி வழியும்.தற்போது ஆயிரத்தில் ஒருவன் நவீன டிஜிட்டர்  தொழில் நுட்பத்தில் மாற்றி அமைக்கபட்டு விரைவில் வெளியாகிறது. டிஜிட்ட்ல் மயமாக்கும் வேலைகள் முடிவடைந்து விட்டன .இசை அப்கிரேடு வேலை நடந்து வருகிறது. ஜனவரி தமிழகம்  முழுவதும் படம் ரிலீசாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக