செவ்வாய், 10 டிசம்பர், 2013

நரேந்திர மோடி ஒரு ஜோக்கர், பொருளாதாரம் மற்றும் வரலாறு அவருக்கு தெரியாது: மணிசங்கர் ஐயர்


சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் புதுடெல்லியில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இந்த 4 மாநிலங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடையை அலை குஜராத்தை தாண்டி அடுத்த மாநிலங்களிலும் அடிக்க தொடங்கியுள்ளது என்று பாரதீய ஜனதா கட்சி கூறிவருகிறது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
அவரது நேர்மையற்ற பேச்சு அவர் எவ்வளவு பெரிய ஒரு ஜோக்கர் என்பதை காட்டியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், அவருக்கு வரலாறு பற்றியும், பொருளாதாரம் பற்றியும் ஒன்றும் தெரியாது என்று மணிசங்கர் ஐயர் பேசியுள்ளார். அதாங்க அது ஒரு டுபாக்கூர் அல்லது ஒரு வண்டுமுருகன் ஆமா சொல்லிப்புட்டன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக