புதன், 11 டிசம்பர், 2013

தி.மு.க: சென்னையில் இருந்து கேரள மக்களை வெளியேற்றினால் என்னவாகும்? கேரளா அட்டைபாடி தமிழர்களைக வெளியேற்றும் கேரளா

சென்னை: 'கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை, சென்னையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடாதா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.கேரள மாநிலம், அட்டப்பாடி பகுதியில், வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும், தங்களுக்கு சொந்தமான நிலங்களை அப்படியே விட்டுவிட்டு, வெளியேற வேண்டும்' என, கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையாக இருக்குமானால், அது புலி வாலை பிடித்த கதை போல ஆகிவிடும். கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள், உலகெங்கிலும் உள்ளனர்; அவர்கள் இல்லாத இடமே இல்லை. "சென்னையில் உள்ள கேரளத்தவர்களை, தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டால், என்னவாகும்?  
இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்தில் உள்ளவர்களும், அடுத்த மாநிலத்தை சேர்ந்தவர்களை, வெளியேற்ற முன் வந்தால், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு என்பதெல்லாம் கேள்விக்குறியாகி விடாதா? அட்டப்பாடியில், பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்களை, தமிழர்கள் ஆக்கிரமிக்கவில்லை. கேரள அரசில் பணியாற்றும் சில அதிகாரிகள், தமிழர்களிடம் இருந்து, அந்த நிலங்களை பெற்று, "பழங்குடியின மக்களிடம் திரும்ப ஒப்படைக்கிறோம்' என்ற பெயரால், அவற்றை ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு, தாரை வார்க்கும் முயற்சியாகத்தான் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது. தமிழக அரசு, இப்பிரச்னை குறித்து உடனடியாக கவனித்து, கேரள அரசுடனும், மத்திய அரசுடனும் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து, அட்டப்பாடியில் காலம், காலமாக இருந்து வரும் தமிழர்களை காப்பாற்ற முன் வர வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார். ஆனா லக்ஷ்மி மேனன், நஸ்ரியா, நயன்தாராவ மட்டும் உட்டுருங்க. அவங்களுக்கு ஒண்ணுன்னா தமிழர்களால தாங்கிக்க முடியாது.

தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உண்டா?< "லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி அமைக்குமா என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

அவரது பேட்டி: பார்லிமென்டில், ஸ்பெக்டரம் ஒதுக்கீடு குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., எம்.பி.,க்கள், அந்த அறிக்கைக்கு, எதிராக கருத்து தெரிவித்து, வெளிநடப்பு செய்துள்ளனர்; அது தான் என்னுடைய கருத்தும். லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணியா என்பது குறித்து, இன்னும் பேச்சுவார்த்தைகளே துவங்கவில்லை. எனவே, யாரோடு கூட்டணி என்பது பற்றிய பேச்சே எழவில்லை. அன்னா ஹசாரே மீண்டும் போராட்டத்தை துவங்கியிருக்கிறார். அந்த போராட்டத்தின் மீது நம்பிக்கையும் இருக்கிறது; ஆதங்கமும் இருக்கிறது. தி.மு.க., பொதுக்குழுவில் பார்லிமென்ட் தேர்தல் மட்டும் அல்லாமல், நிலைமைக்கு ஏற்ப விவாதம் இருக்கும். இவ்வாறு, கருணாநிதி கூறினார். "தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டு சேரலாம் என்ற மனநிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறதே?' என்ற கேள்விக்கு கருணாநிதி, ""தி.மு.க.,வின் மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்ல முடியாது,'' என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக