ஞாயிறு, 1 டிசம்பர், 2013

லக்ஷ்மி மேனன் இன்னும் பள்ளிக்கூடம் செல்கிறார் ! பிளஸ் 2 படிக்கிறார் !

பள்ளியில் ஆசிரியைகள் இன்னும் என்னை நடிகையாக ஏற்கவில்லை. இப்போதுகூட எனக்கு தண்டனை தரப்படுகிறது என்றார் லட்சுமி மேனன். கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு படங்களில் நடித்திருப்பவர் லட்சுமி மேனன். அவர் கூறியதாவது: சினிமாவில் நடித்தபடியே பிளஸ் 2 படிக்கிறேன். என்னுடைய ஆசிரியர், ஆசிரியைகள் இன்னும் என்னை ஒரு நடிகை என்றே நம்பவில்லை. ஒரு மாணவியாகவே பார்க்கிறார்கள். பாடங்கள் படிக்காத பட்சத்தில் வகுப்பறைக்கு வெளியே நிற்கும்படி தண்டனை வழங்குகிறார்கள். சமீபத்தில் இந்த தண்டனையை நான் அனுபவித்தேன். என் வகுப்பு தோழிகளும் என்னை இன்னும் மாணவியாகவே பார்க்கிறார்கள். நான் காமர்ஸ் படிக்கிறேன். தேர்வுக்கு முன்புதான் படிக்கவே தொடங்குவேன். எனது அம்மா டீச்சராக இருக்கிறார். இதனால் விடுபட்ட பாடங்களை நான் படிக்க அவர்தான் உதவுகிறார். இப்போதைக்கு படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் எனக்கு இல்லை. அடுத்த ஆண்டும் இன்னும் நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளப்போகிறேன். நல்ல படங்கள் வந்தால் பிளஸ் 2 பாடங்களை சுத்தமாகவே மறந்துவிடுவேன். அடுத்த படத்தில் பாடப்போகிறீர்களா? என்கிறார்கள். அது இன்னும் உறுதியாகவில்லை. எனது பாட்டி இசை ஆசிரியை அவரிடம் அடிப்படை இசை பயின்றிருக்கிறேன் tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக