திங்கள், 18 நவம்பர், 2013

பாரதரத்னா என்பது ஒரு லஞ்சம் ! பெரியார் அண்ணாவை விடவா சச்சின் தகுதியானவர்?

சென்னை: தமிழகத்தில் 'தந்தை'யாக போற்றப்படுகிற பெரியார் ஈ.வே.ரா மற்றும் பேரறிஞர் அண்ணா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு ஏன் பாரத ரத்னா விருது கொடுக்கப்படவில்லை என்ற விவாதம் சமூக வலைதளங்களில் சூடு பறக்கிறது. சச்சின் டெண்டுல்கர்.. இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம்.. அவருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதை எவரும் ஆட்சேபிக்கவில்லை.. ஆனால் அவரைவிட இந்த விருதைப் பெறக்கூடிய தகுதி படைத்தவர்கள் இன்னமும் சிறப்பிக்கப்படவில்லையே என்ற ஆதங்கம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக எழுகிறது தேசிய அளவில் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆருக்கு இவ்விருது வழங்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன. அதேபோல் தமிழகத்தின் தந்தையாக போற்றப்படுகிற பெரியார் ஈ.வே.ரா, பேரறிஞர் அண்ணா, இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கை  சு சுவாமி சோ ராமசாமி ஜெயலலிதா போன்ற பார்பனர்களுக்கு பாரதரத்னா கண்டிப்பாக கிடைக்கும் ம்ம்ம் ஜெயப்பிரதாவுக்கும் கூட கிடைக்ககூடும் 
1954-ம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு முறைப்படியாக எந்தவொரு பரிந்துரையும் செய்யப்படுவதில்லை. பிரதமர் முடிவெடுத்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்பார்
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் 3 பேருக்கு மட்டுமே இந்த விருதை வழங்க முடியும். குடியரசுத் தலைவரின் கையொப்பமிட்ட சான்றிதழும், பதக்கமும் வழங்கப்படும். இதுவரை 41 பேருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ராஜாஜி, சர்.சி.வி. ராமன், காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல்கலாம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, சி.சுப்பிரமணியம் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது
ராஜாஜியின் சமகால அரசியல் நண்பர் தந்தை பெரியார். எதிரெதிர் அரசியல் முகாம்களில் இருந்தபோதும் 97% விழுக்காடு தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைக்காக தனிமனிதராக களமிறங்கி மாபெரும் சமுதாய இயக்கத்தை கண்டவர். அவருக்கு தமிழகத்தின் அத்தனை உயரிய பதவிகளும் தேடிவந்தபோதும் தூக்கி எறிந்துவிட்டு கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழர்களின் சமூக விடுதலைக்காகவே 'மூத்திர சட்டியை' கையில் பிடித்துக் கொண்டு பாடுபட்டவர்.
அவருக்கு இந்திய அரசு ஏற்கெனவே அஞ்சல் தலை வெளியிட்டும் இருக்கிறது. தமிழகத்தில் அரசு பதவியில் இல்லாத போதும் அவர் மறைந்தபோதும் அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட மாமனிதருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்பது ஒருதரப்பு கருத்து.
தந்தை பெரியாரின் தளபதியாக திகழ்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் இயக்கம் கண்டு தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா. பெரியார், பேரறிஞர் அண்ணா இருவரும் தமிழகத்தின் முகவரிகள். அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கை
பெரியார், அண்ணா வழிநின்றி முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக சமூக அரசியல் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவராக திகழ்பவர் திமுக தலைவர் கருணாநிதி.

இப்படி தகுதிவாய்ந்த தலைவர்கள் இருக்கும் நிலையில் சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பாரத ரத்னா விருது பெறுவதற்கான விதியில் திருத்தம் செய்யப்பட்டது
கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொது சேவை துறையில் சாதித்தவர்கள் மட்டுமே பாரத ரத்னா விருது பெற முடியும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதை பெற முடியும் என்று விதியில் மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்தே தற்போது சச்சினுக்கு பாரத ரத்னா விருது சாத்தியமாகியிருக்கிறது.
சச்சினுக்காக விதிகளை திருத்துகிற லாபி இப்போது வென்றுள்ளது.. தமிழர் சமூக விடுதலைக்காக பாடுபட்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று லாபி செய்ய தமிழக கட்சிகள், எம்.பி.க்கள் முயற்சிக்கவில்லையே.. ஏன் ஏன் என்பதுதான் தமிழர்களின் ஆதங்கம்.. இனியேனும் விழிப்பார்களா அரசியல்வாதிகள்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக