திங்கள், 18 நவம்பர், 2013

காசுக்கு விளையாடிய சச்சினுக்கு பாரதரத்னா விருது ! கோமாளித்தனத்தின் எல்லை

டெல்லி: பணம் பெற்றுக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய சச்சினுக்கு எதற்காக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி. நேற்று முன் தினம் தனது கடைசிப் போட்டியை ஆடினார் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின். அதனைத் தொடர்ந்து முன்பு அளித்த வாக்குறுதியின் படியே, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழக்க இருப்பதாக அறிவித்தது மத்திய அரசு. ஆனால், அதனை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி. இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது..
கிரிக்கெட் விளையாடி பல கோடி சம்பாதித்தவர் சச்சின். இவர் காசு வாங்கிக் கொண்டுதான் இத்தனை காலம் விளையாடினார். அவருக்குப் போய் பாரத ரத்னா விருது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது
இவரை விட தகுதியான மிகச் சிறந்தவர்கள் இந்த விருதுக்கும், கெளரவத்திற்கும் தகுதியான பலர் உள்ளனர்

பாரதரத்னா விருதே கேலிக்குரியதாக மாறி விட்டது. இதை ஒழிக்க வேண்டும். அதற்கு இப்போது முக்கியத்துவம் இல்லாமல் போய் விட்டது.
ஓசியில் விளையாடவில்லை சச்சின். பல கோடி பணத்தை விளையாடி சம்பாதித்தவர் அவர்
தியான்சந்த்துக்கு ஏன் இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப்படவி்லை. இதை அரசு விளக்க வேண்டும்' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக