திங்கள், 18 நவம்பர், 2013

குஷ்பு மீது அழுகிய தக்காளி முட்டை வீசிய பாமக குண்டர்கள் மீதான வழக்கு

நடிகை குஷ்பு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு;நடிகை குஷ்பு தமிழக பெண்களின் கற்பு குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் முருகன் மேட்டூர் குற்றவியல் கோர்ட்டு எண் 2–ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகை குஷ்பு மேட்டூர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். பின்னர் வெளியே வந்தபோது, அவர் மீது ஒரு கும்பல் அழுகிய தக்காளி, முட்டை ஆகியவற்றை வீசியது.இதுகுறித்து மேட்டூர் தாசில்தார் அளித்த புகாரின்பேரில், மேட்டூர் போலீசார் பா.ம.க. பிரமுகர் அறிவழகன் உள்பட 41 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடர்பான விசாரணை மேட்டூர் குற்றவியல் கோர்ட்டு எண் 1–ல் நடந்து வருகிறது.இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் சாட்சிகள் யாரும் ஆஜராகாததால் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ், விசாரணையை வருகிற டிசம்பர் மாதம் 26–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.     nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக