திங்கள், 21 அக்டோபர், 2013

டெல்லி சட்ட சபைக்கு காங்கிரஸ் ,பாஜக மற்றும் ஆத்மி கட்சியால் மும்முனை போட்டி ! We are no longer spoilers: Kejriwal

ஆம் ஆத்மி கட்சியின் வருகையால் பாஜக
தனது வெற்றி வாய்ப்பை இழக்கபோவதாக இப்போதே புலம்ப தொடங்கி விட்டது
70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர்
4-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது.> டெல்லி மாநிலம் உருவான பின்னர் இப்போதுதான் அங்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி கட்சி என மும்முனை போட்டி உருவாகி உள்ளது. எனவே இப்போதே டெல்லியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பாரதீய ஜனதா பிரசார குழு கூட்டம் டெல்லியில் கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடந்தது. கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முன்னாள் தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, நிதின் கட்காரி, வெங்கையா நாயுடு மற்றும் டெல்லி மாநில பாரதீய ஜனதா தலைவர் விஜய் கோயல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி வேட்பாளராக யாரை முன்னிலைப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, எந்த சர்ச்சையிலும் சிக்காத டாக்டர் ஹர்ஷ் வர்தனை முன்னிலைப்படுத்த விரும்புவதாக தெரிகிறது. அவருக்கே பாரதீய ஜனதா மூத்த தலைவர்களும் ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது.


ஆனால் இதுகுறித்து அறிந்த டெல்லி பாரதீய ஜனதா தலைவர் விஜய் கோயல் கூட்டத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "என்னை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்காவிட்டால் கட்சிப்பதவியை ராஜினாமா செய்து விடுவேன்" என கூறி மிரட்டல் விடுத்ததாகவும், தொடர்ந்து அவர் கூட்டத்தில் இருந்தே வெளிநடப்பு செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதைமீறி வேறு ஒருவரை பாரதீய ஜனதா முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்தால், விஜய் கோயல் வெளிப்படையாக போர்க்கொடி உயர்த்துவார், அது கட்சியில் பிளவை உண்டாக்கும், அத்துடன் பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராகவும் தாக்கத்தை உண்டாக்கலாம் என்ற கருத்து வெளிப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து இந்த தருணத்தில், கட்சியில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படாமல் காத்துக்கொள்ளும் வகையில், டெல்லி சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக யாரையும் முன்னிலைப்படுத்துவதில்லை என பாரதீய ஜனதா பிரசாரக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக