சனி, 19 அக்டோபர், 2013

CPI (M) தலைவர்: 20 லட்சத்தை எடுத்து மெத்தையாக மாற்றி படுத்தேன்

20 லட்சத்தை எடுத்து மெத்தையாக மாற்றி படுத்தேன்: நீண்ட நாள் கனவு என்கிறார் மார்க்சிஸ்ட் தலைவர் A CPI (M) leader was found lying on lakhs of rupees in his home at Jogendranagar area in Agartala on Thursday. Babul Acharjee (55), recently got a payment of Rs. 70 lakh for a work of constructing public toilets in suburbs of Agartala and in few other sub-divisional headquarters. The work was done jointly with 4 other share-holders, sources inside the party said. Acharjee literally slept on packets of rupees scattered on his bed, just to get the feel of being rich. -  திரிபுரா மாநிலத்தில், சமர் ஆச்சார்ஜி என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ‘பண மெத்தை’யில் படுத்திருப்பது போன்று வெளியான டி.வி. காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அகர்தலா மாநகராட்சியின் 3 வார்டுகளில் மலிவு விலை கழிவறை அமைக்கும் பணி ஒப்பந்தம் எடுத்திருந்த அவர் அதன் மூலம் ரூ.2 கோடிக்கு மேல் லாபம் அடைந்தார். இந்த தகவலை அந்த டி.வி. நிகழ்ச்சியில் அவரே தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘பண மெத்தையில் படுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதை நிறைவேற்றுவதற்காக வங்கியில் இருந்து ரூ.20 லட்சத்தை எடுத்து மெத்தையாக மாற்றியதாக’’ தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ‘‘சில கம்யூனிஸ்டு தோழர்கள் நிறைய சொத்து இருந்தாலும் இல்லாதவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள். நான் அப்படி அல்ல’’ என்றும் குற்றம் சாட்டினார்.
திரிபுரா மாநிலத்தில் உள்ள உள்ளூர் டி.வி.யில் வெளியான இந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கட்சியின் மாநில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக