சனி, 19 அக்டோபர், 2013

கலைஞர் :ஏற்காடு இடைத்தேர்தலில் தேர்தல் கமிஷன் நியாயமாக நடக்க வேண்டும்

சென்னை:'ஏற்காடு இடைத்தேர்தலில், தேர்தல் கமிஷன் நியாயமாக நடக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர்  கூறியுள்ளார்.
தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காப்பீடு திட்டம் உட்பட, எல்லா திட்டங்களுமே நிலைகுலைந்து விட்டன.சச்சின் தெண்டுல்கர் தன், 200 வது டெஸ்டில் இருந்து, ஓய்வெடுக்க முடிவெடுத்து உள்ளார்; அவருக்கு என் வாழ்த்துக்கள். தியாகுவின் உண்ணாவிரதத்தை, முதல்வர், அலட்சியப்படுத்தியது எதிர்பார்த்தது தான். ஏற்காடு இடைத்தேர்தலில் தேர்தல் கமிஷன் நியாயமாக நடந்து கொள்ளும் என, எதிர்பார்க்கிறோம்.


வரும் தேர்தலில், ஊடகத்தின் பங்கு இப்போது இருப்பது போலத்தான் இருக்கும் என்பது, என் நம்பிக்கை. மக்களை நல்வழியில் எடுத்து செல்கிற பொறுப்பு அரசுக்கு உண்டு. அந்த பொறுப்பை தட்டி கழித்தால், இளைஞர்கள் மாத்திரமல்ல, எல்லா மக்களுமே அவதிப்படுவர். அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி மாற்றுப்படுவது, தவறுகள் அதிகம் நடப்பதாக, அரசே ஒப்புதல் வாக்கு மூலம் அளிப்பதாக, நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம். டெசோவின் அடுத்தக் கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். மின்பற்றாக்குறை போக்க அரசு நடவடிக்கை எடுத்தது போல் தெரியவில்லை. நிர்வாகத்தில் தமிழ்நாடே கருத்து கிடக்கிறது; இதில் நான் என்ன புதிதாக கருத்து சொல்ல.இவ்வாறு, கருணநிதி கூறியுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக