புதன், 23 அக்டோபர், 2013

பேராசிரியை கொலை: வேலைக்கார பெண் கள்ளக்காதலனுடன் கைது!

திருப்போரூர் அருகே உள்ளதையூரில் கேளம்பாக்கம் - பழைய மால்லபுரம் சாலையில் 8 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் இ-3 பிளாக்கில் வசித்து வந்தவர் எப்சிபாய் (59). முன்னாள் கல்லூரி பேராசிரியை.இவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சாராள் தக்கர் கல்லூரியில் பணியாற்றி பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது மகன் கிப்ட்சன் (24) உடன் தையூர் விஜயசாந்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கிப்ட்சன் மறைமலைநகரில் உள்ள மந்திரா சிட்டியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 17ந் தேதி இரவு வழக்கம்போல வேலைமுடித்து கிப்ட்சன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு லேசாக திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பேராசிரியை எப்சிபாய் கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க வளையல்கள், 5 சவரன் தங்க சங்கலி மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம்¢ ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் துணைசூப்பிரண்டு மோகன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கல்லூரி பேராசிரியை எப்சிபாயின் செல்போனை புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முருகன் (39) பயன்படுத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் எப்சிபாயின் வீட்டில் வேலை செய்து வந்த தையூர்¢ கிராமத்தை சேர்ந்த பிரமிளா (36)வுடன் சேர்ந்து பேராசிரியை எப்சிபாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
விசாரணையில் பிரமிளா அளித்த வாக்குமூலம் வருமாறு:- ‘நான் தையூர் பகுதியில் வசித்து வருகிறேன். குடும்ப கஷ்டம் காரணமாக வீட்டுவேலைகள் செய்து வந்தேன். எப்சிபாய் ஜனவரி மாதத்தில் இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிவந்தார். அன்று முதல் நான் அவர்கள் வீட்டில் வீட்டு வேலைகள் செய்து வருகிறேன்.
எனது கணவர் அன்பு. அவரை பார்ப்பதற்காக புதுப்பாக்கத்தை சேர்ந்த அவரது நண்பர் முருகன் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அப்போது முருகனுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்தோம். அதனால் செலவு அதிகமானது. எனவே எங்களுக்கு நிறைய பணம் தேவைப்பட்டது.
அப்போது தான் எப்சிபாய் அதிக நகைகள் அணிந்திருப்பதை பார்த்தேன். வீட்டிலும் அதிக அளவில் பணம் இருக்கும். எப்சிபாயை கொலை செய்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து உல்லாசமாக வாழலாம் என்று எனது கள்ளக்காதலன் முருகனிடம் கூறினேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
கடந்த 17-ந் தேதி வழக்கமாக வேலைக்கு வந்தேன். கதவை தட்டியதும் எப்சிபாய் கதவை திறந்து விட்டார். அப்போது அங்கே மறைந்திருந்த முருகன் நைசாக வீட்டின் சமையல் அறையில் உள்ளே சென்று பதுங்கிக்கொண்டார்.
பின்னர் முருகன் வெளியில் வந்ததை பா£த்¢த எப்சிபாய் யார் நீ? எப்படி உள்ளே வந்தாய்? என்று கேட்டார். உடனே நாங்கள் இருவரும் சேர்ந்து எப்சிபாயை தாக்கினோம். அவர் திமிறியதால் அவரது தலையை முருகன் சுவற்றில் மோதினார். இதில் எப்சிபாய் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே நாங்கள் இருவரும் அவரது கழுத்தை நெரித்து கொன்றோம். எப்சிபாய் இறந்ததை உறுதி செய்துகொண்டு நகைகள், செல்போன் மற்றும் பீரோவில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு வந்துவிட்டோம்.’ இவ்வாறு பிரமிளா வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கைது செய்யப்ட்ட பிரமிளாவுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். முருகனுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து 10 சவரன் நகை, ரூ.5 ஆயிரம் மீட்கப்பட்டது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக