ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கர்நாடகாவில் BJP தலைவர்களின் நிர்வாண நடன பார்ட்டி

கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகி தனது ஆதரவாளர்களுடன், பெண் ஒருவரை நிர்வாணமாக நடனம் ஆட வைத்து ரசித்த வீடியோ காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பாரதிய  ஜனதா கட்சியின் பிதார் மாவட்ட செயலாளர், பாபுவால் உள்ளிட்டோர் நடனத்தை கண்டு ரசிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. நடனம் ஆடிய அந்த பெண், விருந்து நிகழ்ச்சிக்காக மகாராஷ்ட்டிராவில் இருந்து அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.< இந்த நடனத்தை பெண்களும் பார்த்து ரசித்த கொடுமை அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.
பெண்ணை நிர்வாணமாக நடனமாட வைத்த பாரதிய ஜனதா நிர்வாகி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

நடனம் ஆடிய பெண் பேசும் காட்சியில், அவர் அரசியல் பிரமுகர்கள் மீது கடுமையாக குற்றம்சாட்டினார். அரசியல் பிரமுகர்கள் ஹைதராபாத்துக்கு வந்து தங்களை அடிக்கடி ஆபாச நடனம், உல்லாசத்துக்கு அழைத்து செல்வதாகவும், ஒருகட்டத்தில் அவர்கள் தொல்லை அதிகரித்து விடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக