ஞாயிறு, 6 அக்டோபர், 2013

சோனியா:ஆந்திர அமைச்சர்கள் ராஜினாமா முடிவை பரிசீலிக்க வேண்டும்

புதுடெல்லி: மத்திய அமைச்சர் பல்லம் ராஜு பதவியை ராஜினாமா செய்ய
வேண்டாம்Õ என காங்கிரஸ் தலைவர் சோனியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலம் போராட்டம் நடைபெற்று வருகிறது. தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது என காங்கிரஸ் கமிட்டி அறிவித்தது. அதை தொடர்ந்து மத்திய அமைச்சரவையும், தெலங்கானா தனி மாநில மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து ஒருங்கிணைந்த ஆந்திரா வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. முதல்வர் கிரண் குமார் ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக பதவியை ராஜினாமா செய்து விட்டு தனி கட்சி தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாயின. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், சீமாந்திரா பகுதியை சேர்ந்த 11 மத்திய அமைச்சர்கள், தெலங்கானாவை எதிர்த்தும், ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தியும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளனர். தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகனும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். கடலோர ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பல்லம் ராஜு. அவர் தற்போது மத்திய மனிதவளத் துறை அமைச்சராக உள்ளார். அவரும் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்தார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து சீமாந்திரா அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதற்கு முன்னதாக பல்லம் ராஜு உள்பட சீமாந்திரா அமைச்சர்கள் யாரும் ராஜினாமா செய்ய வேண்டாம். பிரச்னை தீர்வு காண எல்லோரும் சந்தித்து பேசலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார். பல்லம் ராஜு பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம். இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சோனியாவும் கேட்டுக் கொண்டார். - See more at: http://www.tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக