திங்கள், 7 அக்டோபர், 2013

ஆனந்தமூர்த்தி :ஹிட்லர், முசோலினி போன்ற மோடிக்கு குற்றஉணர்வு இல்லை

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி பேட்டி


 குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி ஹிட்லர், முசோலினி போன்றவர். அவர் பிரதமராகக் கூடாது என்று கருநாடகாவை சேர்ந்த சாகித்ய அகா டமியின் ஜன்பித் விருது பெற்ற எழுத் தாளர் ஆனந்தமூர்த்தி கூறினார்.
சமீபத்தில் அவர் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானால் அப்படிப்பட்ட நாளில் நான் உயிர்வாழ விரும்பவில்லை என்றுகூறினார். இதனால் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி யிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் மோடிபிரதமராவதற்கு முன் நான் இறந்துவிட விரும்புகிறேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார். அவரது பேட்டி விவரம்வருமாறு-
கேள்வி: மோடி பிரதமரா னால் நான் நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று நீங்கள் கூறியதற்கான காரணம் என்ன? பதில்: அப்படி நான் கூறியதற்கு நான் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறேன் என்று அர்த்தமில்லை. எனக்கு குடியேற வேறு நாடு இல்லை. உண்மையை கூறினால் கர்நாடக மாநிலத்தை விட்டு வெளியே போகவும் விருப்பமில்லை. எனது உடல் ஆரோக்கிய நிலை மோசமடைந்து கொண்டே வருகிறது. அதை மன தில் வைத்து மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு இறந்துவிடுவேன் என்று கூறினேன்.
கேள்வி: மோடி பிரதமர்ஆகக்கூடாது என்று குறிப்பாக சொல்ல காரணம் என்ன?
பதில்: மோடிக்கு குற்றஉணர்வு இல்லை. அப்படிப்பட்டவர்கள் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். மக்களை கொலை செய்வது அரசியலில் நியாயமா னது என்று அவர்கள் கருதுகிறார் கள். மோடிக்கும், சர்வாதிகாரி ஹிட்லருக்கும் எந்தவித வித்தியாச மும் இல்லை.
இந்தியாவுக்கு லால் பகதூர் சாஸ்திரி, பி.ஆர். அம்பேத் கர் பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் ஏ.பி. வாஜ்பாயி போன்ற வர்கள் தான் தேவை. அவர்கள் சாதி, மதம், கலாச் சாரம் போன்ற விஷயங்களில் வெளிப் படையாக பணியாற்றினார்கள். தற்போது இந்தியாவில் அப்படிப்பட்ட தலைவர்கள் யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
கேள்வி: நீங்கள் மோடியை எதிர்த்து பேசியதிலிருந்து பி.ஜே.பி. உங்களை காங்கிரஸ் ஆதரவாளர் என்று கூறி வருகி றது.
பதில்: நான் நீண்ட காலமாக காங் கிரசை எதிர்த்து வந்தேன். நான் ஒரு சோசலிஸ்ட். கடந்த நாடாளுமன்ற தேர் தலில், நான் காங்கிரசை ஆதரித்து பிரச் சாரம் செய்தேன். அது பற்றி எனக்கு வருத்தமில்லை. காங்கிரஸ் கட் சிக்கு மாற்றான கட்சி இல்லை என்று நான் உறுதியாக கருது கிறேன்.  செய்தியாளர்களிடம் ஆனந்தமூர்த்தி மேலும் கூறிய தாவது-
மோடி பிரதமர் ஆவதற்கு அவ சரப்படுகிறார். ஆபத்தான விஷ யங்கள் நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளிடம் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் இதுவரை அரசியலும், ராணுவ மும் தனித்தனியாக இருந்து வந்துள்ளன. மோடி அலையை இந்தியா முறியடிக்கும். அவர் வெற்றி பெறமாட்டார். ஊடகங் கள் தான் அவரை பெரிதுபடுத்தி வருகின்றன  என்று ஆனந்த மூர்த்தி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக