திங்கள், 30 செப்டம்பர், 2013

லாலுவின் மாட்டுதீவன ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு !

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான, கால்நடை
தீவன ஊழல் வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ். இவர், பீகார் முதல்வராக இருந்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கிய திட்டத்தில், ஊழல் செய்ததாக, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, அவர் மீது, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.ய்பாசா மாவட்ட கருவூலத்திலிருந்து, 37 கோடி ரூபாயை, இந்த திட்டத்துக்காக, முறைகேடாக எடுத்தது தொடர்பான வழக்கு, ராஞ்சி, சி.பி.ஐ., கோர்ட்டில் நடந்தது. இதில், அரசு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், லாலு தரப்பின் வாதம், இம்மாதம், 17ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தீர்ப்பு, ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிறப்பு கோர்ட் நீதிபதி, பி.கேசிங், இந்த வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கிறார். குற்ற வழக்குகளில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில், லாலு வழக்கில் வழங்கப்படவுள்ள தீர்ப்பு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக