திங்கள், 30 செப்டம்பர், 2013

தமிழ்நாட்டில் 140000 ரூபாய்க்கு குழந்தை விற்பனை !

ஒரு லட்சத்தி 40 ஆயிரத்திற்கு குழந்தை விற்பனை: பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேர் கைது
பழநி அருகே வி.பி.புதூரைச் சேர்ந்த கருப்பணன் மகன் ராமசாமி, இவருக்கும், பழநி மதனபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகள் அபிராமிக்கும் அக்டோபர் 2012ல் திருமணம் நடந்தது. கர்ப்பமான அபிராமி, கணவனை பிரிந்து, பெற்றோர் வீட்டில் இருந்தார்.
ஆக.30ல் பழநி அரசு ஆஸ்பத்திரியில் அபிராமிக்கு பெண்குழந்தை பிறந்தது. ராமசாமி குழந்தையை கேட்டபோது, அவரிடம் குழந்தை இறந்துவிட்டது என்றனர். சந்தேகமடைந்த ராமசாமி, மனைவி அபிராமி, மாமியார் வேலுமணி மீது, பழநி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணையில், அபிராமி தனது குழந்தையை விற்க சிவகிரிபட்டியைச் சேர்ந்த காளியப்பன் மனைவி சாந்தி, முருகன் மனைவி சாந்தியிடம் கொடுத்தார். அவர்கள் சத்யாநகர் பெருமாள் மனைவி நல்லம்மாளிடம் குழந்தையை கொடுத்தனர்.


அவர், ஏற்காட்டைச் சேர்ந்த பாபு மனைவி ராணி மூலம் கிருஷ்ணரியைச் சேர்ந்த சனாவுல்லா என்பவரிடம் ஒரு லட்சத்தி 40 ஆயிரம் ரூபாயுக்கு விற்றார்.
குழந்தையை விற்ற பாட்டி வேலுமணி, வாடகைதாய் புரோக்கர்கள் கே.சாந்தி, எம்.சாந்தி, நல்லம்மாள் மற்றும் ராணியை இன்ஸ்பெக்டர் கவிதா கைது செய்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் கவிதா கூறுகையில், ஏழ்மை மற்றும் கணவரை பிரிந்து வாழும் பெண்களிடம் பணத்தாசையை காட்டி, குழந்தையை விற்ற பெண் புரோக்கர்கள் கைதாகிள்ளனர் என்றார் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக