திங்கள், 30 செப்டம்பர், 2013

நவாஸ் ஷெரிப் மன்மோகன் சந்திப்பு ! பயங்கரவாதிகள் எதிர்ப்பையும் மீறி சந்திப்பு

லஷ்கர் மிரட்டல், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை மீறி நவாசுடன் மன்மோகன் பேச்சு

நியூயார்க் : காஷ்மீரில் திடீர் தாக்குதல் நடத்தி லஷ்கர் தீவிரவாத அமைப்பு விடுத்த மிரட்டல், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு ஆகியவற்றையும் மீறி, அமெரிக்காவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று  பேச்சுவார்த்தை நடத்தினார். தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் துணை போக வேண்டாம் என்று ஷெரீப்பிடம் கண்டிப்புடன் கூறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் சென்றுள்ளார். இதில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பங்கேற்றுள்ளார். இருதரப்பு உறவு பற்றி இவர்கள் இருவரும் அங்கு சந்தித்துப் பேச, ஏற்கனவே தேதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை காவல் நிலையத்திலும், ராணுவ முகாமிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 12 பேரை கொன்றனர். இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜ உள்ளிட்ட கட்சிகள், பாகிஸ்தான் பிரதமருடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தையை கைவிட வேண்டும் என்று மன்மோகன் சிங்கை வலியுறுத்தின. அதேபோல், பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தய்பா தீவிரவாத அமைப்பும் இந்த பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று மிரட்டல் விடுத்தது. ஆனால்,  இவற்றை எல்லாம் மீறி நியூயார்க் நகரில் மன்மோகன் சிங்கும் நவாஸ் ஷெரீப்பும் நேற்று மாலை பேச்சுவார்த்தையை தொடங்கினர்.
இதில், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை பற்றியே மன்மோகன் சிங் முக்கியமாக பேசினார். தீவிரவாதிகளுக்கு துணை போக வேண்டாம் என்று நவாசிடம் கண்டிப்புடன் வலியுறுத்தினார். தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் செயல்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் நடத்திய பேச்சிலும், மறுநாள் ஐநா கூட்டத்தில் பேசியபோதும் இதே கருத்தை மன்மோகன் வலியுறுத்தினார். dinakarancom

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக