திங்கள், 30 செப்டம்பர், 2013

ஆபாசத் திரைப்படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் ! வி.எஸ்.ராகவன் கூறினார்.


ஈரோடு, கொங்கு கலையரங்கில், கவிதாலயம் இசைப்பள்ளி மற்றும்
ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் சார்பில் பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்த நடிகர் ராகவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 1954-ஆம் ஆண்டு வெளிவந்த "வைரமாலை' என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக நான் அறிமுகம் ஆனேன். முதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வருகிறேன். பெரும்பாலும் தந்தை கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறேன்.
÷என்னைப் பொருத்த வரை சினிமா என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமே தவிர, ஆபாசமாக இருக்கக் கூடாது. நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். ஆபாசப் படங்களை மக்கள் புறக்கணித்தால் மீண்டும் ஆபாசப் படங்களை தயாரிக்க அஞ்சுவார்கள்.

÷நான் நடித்ததிலேயே, சவாலே சமாளி, வாழையடி வாழை ஆகிய படங்கள் எனக்கு திருப்தி தந்த படங்களாக அமைந்தன. திரையுலகில் நாகேஷுடன் பழகிய பிறகுதான் நகைச்சுவையாகப் பேசுவதைக் கற்று கொண்டேன். ÷எனக்கு இப்போது 89 வயதாகி விட்டது. சாகும் வரையிலும் நடித்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை என்றார். ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.எஸ்.ராகவனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது   dinamani.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக