திங்கள், 30 செப்டம்பர், 2013

கி.வீரமணி: இழிவிலிருந்து நீங்களும் சரி, நாங்களும் சரி விடுபட வேண் டாமா!

கடைசி ஆதிக்கவாதியையும், கடைசி சுரண்டல்காரனையும், கடைசி மூடநம்பிக்கைவாதியையும் ஒழித்து விட்டுத்தான் ஒழிவான்!
விருத்தாசலம் மாநாட்டில் தமிழர் தலைவர் போர்ப்பறை!

 கடைசி ஆதிக்கவாதியையும், கடைசி சுரண்டல்காரனையும், கடைசி மூடநம்பிக்கைவாதி யையும் ஒழித்துவிட்டுத் தான் இந்த வீரமணி ஒழிவான் என் றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
விருத்தாசலம் வானொலித் திடலில் நேற்று (28.9.2013) மாலை நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் கழக மாணவரணி மாநாட்டில் நிறைவுரை  வழங்கிய போது அவர் குறிப்பிட்டதாவது:
விருத்தாசத்தில், திராவிடர் கழக மாநாடு நடைபெறக் கூடாது; ஊர்வலம் நடக்கக் கூடாது. அப்படி நடந்தாலும் நான் இங்கு வரக் கூடாது என்பது சிலரின் ஆசை; அதற்காக வன்முறையில் இறங்கியுள்ளனர். (தலைவர் வந்த வாகனத்தை சில காலிகள் தாக் கினர், தலைவரையும் தாக்க முயன்றனர்).
இந்த இயக்கத்தைப்பற்றி அறி யாதவர்கள் இவர்கள். எதிர்க்க எதிர்க்கத்தான் இந்த இயக்கம் வளரும் - அப்படித்தான் வளர்ந் தும் வந்திருக்கிறது.

யாரோ சிலர் போதிய தெளிவு இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்; அவர்களின் பின்னணியில் பார்ப் பனர்களின் தூண்டுகோல் இருக் கிறது  - நமது காவல்துறையும் இத னைச் சரியாகக் கையாளவில்லை.
காலை முதல் பல்வேறு கட்சி களைச் சேர்ந்தவர்கள், விபூதி பூசிய தமிழர்கள், நாமம் தரித்த தமிழர்கள்கூட எங்களை வர வேற்று மகிழ்ச்சியைத் தெரிவித் துக் கொண்டனர். சால்வை களை அணிவித்த வண்ணமாக வும் இருந்தனர்.
நான் வரும் வழியில் சிலர் கூடி வீரமணி ஒழிக என்று கூச்சல் போட்டனர். வீரமணி எப்பொழுது ஒழிவான் தெரி யுமா? கடைசிப் பார்ப்பானின் ஆதிக்கம் இருக்கும் வரை, கடைசி மூட நம்பிக்கைக்காரன் இருக்கும் வரை, கடைசி சுரண் டல்காரன் இருக்கும் வரை, அவற்றை ஒழித்து விட்டுத்தான், வீரமணி ஒழிவான் (பலத்த கரவொலி!)
என் உயிருக்கு மூன்று முறை குறி வைத்தனர். மம்சாபுரத்திலும், சென்னை புதுவண்ணையிலும், ஆத்தூர் தம்மம்பட்டியிலும் என் உயிருக்குக் குறி வைத்துத் தாக் கினார்கள்.
மூன்று முறை எனக்கு இருதய சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. நான் இயற்கையாய் மரணம் அடைவதைவிட இது போன்று பொதுப் பணியில் நான் ஈடுபடும் போது நான் உயிரிழக்க நேரிட் டால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி ஏது?
பத்து வயதில் விருத்தாசலத்தில் இதே வானொலித் திடலில் பேச ஆரம்பித்தவன் நான். தோழர் முனுசாமி, நமது மாவட்டத் தலைவர் இளங்கோ அவர்களின் மாமனார் சபாபதி அவர்கள், முருகன்குடி ராஜவேலு போன் றோர் இந்தப் பகுதியில் இயக்கப் பணிகள் ஆற்றினர்.
இன்றைக்கோ ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் இயக்கத்திற்கு வந்துள்ளனர். இந்த மாநாட்டிற்குப் பிறகு  ஏராளமான இளைஞர்கள் இயக்கத்திற்கு வரு வார்கள்.
நாங்கள் வன்முறையை வன் முறையால் சந்திக்கக் கூடியவர்கள் அல்லர்; எங்களின் அறிவார்ந்த பிரச்சாரத்தால் அவர்களையும் திருத்தவே ஆசைப்படுகிறோம்.
என்னைத் தாக்க வந்தவர் களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் பாடுபடுகிறோம். இன்றைக்குப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசில் 27 சதவீத இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கிடைக்கிறது என் றால் யார் காரணம்?
மண்டல் குழுப் பரிந்துரை களைச் செயல்படுத்த திராவிடர் கழகம் தானே பாடுபட்டது.
மண்டல் அவர்களே பெரியார் திடலுக்கு வந்து உரையாற்றினாரே! நாங்கள் அறிக்கையைத் தான் கொடுக்க முடியும். அதனைச் செயலாக்கும் சக்தி பெரியார் பிறந்த மண்ணுக்குத்தான் உண்டு. திராவிடர் கழகத்திற்குத் தான் உண்டு என்று பேசினாரே!
நான் கிருஷ்ணன் பற்றி அறிக்கை வெளியிட்டதாகக் கோபப்படுகிறார்கள். அதற்காக வழக்குத் தொடுக்கப் போவதாகவும் கூறி னார்கள். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். வீதியில் சொல்லுவதை, நீதிமன்றத்திலும் ஆதாரத்துடன் கூற நல்ல வாய்ப் புக் கிட்டும்.
அந்தக் கிருஷ்ணன் தானே கீதையை உண்டாக்கி சதுர்வர் ணம் மயா சிருஷ்டம் என்றான். நான்கு வருணத்தையும் நானே உண்டாக்கினேன் என்றான்.
அந்த நான்கு வருணத்தில் நீங்கள் யார் - நாம் யார்? சூத்தி ரர்கள் தானே! சூத்திரன் என்றால் யார்? இதோ அசல் மனுதர்மம். அதன் 8ஆவது அத்தியாயம் 415ஆவது சுலோகம் என்ன சொல்லுகிறது?
யுத்தத்தில் புறங்காட்டி ஓடு பவன், பக்தியால் ஊழியம் செய்கிறவன், தனது தேவடியாள் மகன் என்று சொல்லவில்லையா?
இந்த இழிவிலிருந்து நீங்களும் சரி, நாங்களும் சரி விடுபட வேண் டாமா!
சூத்திரனுக்குப் படிப்பு கிடை யாது, சொத்துரிமை கிடையாது; இவ்வளவும் இன்று கிடைத்துள் ளன என்றால் அதற்கும் காரணம் நாங்கள் தானே!
நாங்கள் இல்லையென்றால்  மீண்டும் ராஜாஜியின் குலக் கல்வி திட்டம் தானே வரும்!
இங்கு மோடி வந்து விட்டுச் செல்லுகிறாரே - அவர் ஆட்சியில் மனுதர்மம் பாடமாக வைக்கப் பட்டுள்ளதே. இந்தியா முழுமை யும் இந்த மனுதர்மக் கொடியைப் பறக்க விடத்தானே முயற்சி நடக் கிறது? அதனைத் தடுத்து நிறுத் தும் ஆற்றல் இந்த இயக்கத்திற்குத் தான் உண்டு என்று குறிப்பிட் டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக