சனி, 7 செப்டம்பர், 2013

ஆசிட் விற்பனைக்கு கட்டுபாடு ! புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் ! மீறினால் 50000 அபராதம்

புதுடில்லி : நாட்டில், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும், "ஆசிட்' வீச்சு டில்லியில், ஆசிட் வீச்சுக்கு ஆளான, லட்சுமி என்ற பெண், தனக்கெதிராக நடத்தப்பட்ட கொடுமையை எதிர்த்து, கோர்டில் வழக்கு தொடர்ந்தார். ஆசிட் வீச்சை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார். இதையடுத்து, "ஆசிட் வீச்சு தாக்குதல்களை தடுக்க, மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்ற மத்திய அரசு, அனைத்து மாநிலங்களிலும், ஆசிட் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, ஜாமினில் வெளிவர இயலாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய, சட்டம் இயற்றவும் அறிவுறுத்தியுள்ளது. புகைப்படத்துடன் அடையாள அட்டை:</ மத்திய அரசின் நேற்றைய உத்தரவின் முக்கிய அம்சங்களாவன:அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே ஆசிட் விற்பனை செய்யப்படும்.
அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தங்கள் அலுவலகப் பயன்பாட்டுக்கு வாங்கும் ஆசிட்டை பத்திரமாக பயன்படுத்த வேண்டும். பயன்பாடு பற்றி முழு விவரங்களையும் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். ஆசிட் விற்பனையாளர்கள், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு ஆசிட் விற்பனை செய்யக் கூடாது. அதை வாங்குபவரின், புகைப்படத்துடன் கூடிய, முழு முகவரி அடங்கிய அடையாள அட்டை நகலைப் பெற்ற பிறகே, ஆசிட் வழங்க வேண்டும். விற்பனையாளர்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை, விற்கப்பட்ட மொத்த ஆசிட் அளவு, கையிருப்பு பற்றிய தகவல் அறிக்கையை, மாவட்ட துணை கலெக்டர்களிடம், தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் விற்பனையாளர்களுக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களில், ஆசிட் பயன்பாடு பற்றிய அறிக்கையை, மாவட்ட துணை கலெக்டரிடம் வழங்க வேண்டும். இது பற்றிய கோப்புகளை, மாவட்ட கலெக்டர் பராமரிக்க வேண்டும்.


தாக்குதலை தடுக்கும் வகையில், அனைத்து மாநிலங்களிலும், ஆசிட் விற்பனையை தடை செய்யுமாறு, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மீறுவோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.பல மாத அவஸ்தை:பெண்களின் மீது, ஆசிட் வீசி தாக்குதல் நடத்தும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில், காதலை ஏற்க மறுத்த, பொறியியல் பட்டதாரி வினோதினி, ஆசிட் வீச்சுக்கு ஆளாகி, பல மாத அவஸ்தைக்குப் பின், உயிரிழந்தார். இது போல், நாட்டின் பல பகுதிகளிலும், பெண்கள், ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு:

ஆசிட் வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறைந்தபட்சம், 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அந்த கொடூர சம்பவம் நடந்த, 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். மீதமுள்ள இரண்டு லட்சம் ரூபாயை, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில், "பிளாஸ்டிக் சர்ஜரி' சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறப்பு சிகிச்சை வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளை அடையாளம் கண்டு, அரசு செலவில், அங்கு சிறப்பு படுக்கை வசதிகளை, ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மறு வாழ்வுக்கு, மாநில அரசு, போதிய நடவடிக்கைகளை, விரைவில் செய்து கொடுக்க வேண்டும்.ஆசிட் வீச்சில் ஈடுபடும் குற்றவாளிகளை, ஜாமினில் வெளி வர முடியாத பிரிவுகளில், கைது செய்யும் வகையில், புதிதாக சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவுகளை, மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

காதலிக்க மறுத்த இளம்பெண் மீது "ஆசிட்' வீச்சு:

காதலை ஏற்க மறுத்த இளம் பெண், நேற்று, "ஆசிட்' வீசி தாக்கப்பட்டுள்ளார். அவர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஒடிசாவில், ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர், அகிலேஷ் மண்டல். அதே பகுதியை சேர்ந்த, 19 வயது இளம் பெண்ணை, ஒருதலையாக காதலித்துள்ளான். அந்தப் பெண், இவன் காதலை ஏற்க மறுத்ததால், ஆத்திரம் அடைந்தான்.வீட்டில், அப்பெண் உறங்கிக் கொண்டிருந்த போது, ஜன்னல் வழியே, ஆசிட் பாட்டில்களை, அந்தப் பெண் மீது வீசியுள்ளான். இதில், அந்தப் பெண் பலத்த காயமடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்ட கிராமவாசிகள், அப்பெண்ணை, மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமறைவாகியுள்ள அகிலேஷை, போலீசார் தேடி வருகின்றனர்.இதே போல், அம்மாநிலத்தின், இசாப்பூர் பகுதியில், ஆண் ஒருவர் மீது ஆசிட் வீசிய, இரு ஆண்களை, போலீசார் தேடி வருகின்றனர். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக