சனி, 7 செப்டம்பர், 2013

லக்கா கிக்கா ரோஜா ஆந்திர பிரிவினையை எதிர்த்து உண்ணாவிரதம் ! கங்க்ராட்ஸ் ஸ்லிம்மா வாங்க !

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கான அமைக்க மத்திய அரசும், காங்கிரஸ் காரிய கமிட்டியும் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
திருத்தணியை அடுத்த நகரியில் நடந்த போராட்டத்தில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். நகரியில் உள்ள ஓம் சக்தி கோவில் அருகில் இருந்து மணிக் கூண்டு வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் நடிகை ரோஜா பேரணியாக வந்தார்.
பின்னர் மணிக்கூண்டு முன்பு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் அமர்ந்து மாலை வரை உண்ணாவிரதம் இருந்தார்.
அப்போது பேசிய அவர், சுதந்திரம் பெற்றது முதல் சுமார் 50 ஆண்டுகள் ஆந்திராவை ஆண்ட காங்கிரஸ் கட்சியும், 9 ஆண்டுகள் முதல்வராகவும் 9 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஒன்றுபட்ட ஆந்திர மாநில வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை புறக்கணித்து வருகின்றனர்.
அவர்கள் ஆட்சிக்கு வருவது ஒன்றையே குறிக்கோள்களாக கொண்டு மாநிலத்தை பிரிக்க ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மட்டுமே மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர் என்று கூறினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக