வெள்ளி, 6 செப்டம்பர், 2013

கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் வந்தவர் எரித்துக்கொலை ! பெண்ணின் உறவினர்கள் ஆத்திரம்

A Madhya Pradesh woman took revenge on the man who raped her at knifepoint by dousing him in kerosene and setting him on fire.
The deceased, who has been identified as Raju Vishvakarma, 38, died of burn injuries in a local hospital on Friday.
மத்திய பிரதேச மாநிலம் காட்னி அருகே நிகரா கிராமத்தில் உள்ள இளம்பெண் ஒருவரை கடந்த ஏப்ரல் மாதம் 30–ந் தேதி அப்பகுதியை சேர்ந்த ராஜூ விஸ்வகர்மா என்பவர் கற்பழித்தார். இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதம் சிறையில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். நேற்று  இரவு ராஜூ விஸ்வகர்மாவை, சமரச பேச்சுவார்த்தைக்காக அந்த பெண் தொலைபேசியில் அழைத்தார். இதை நம்பி அங்கு சென்ற அவர் மீது, பெண்ணின் அண்ணன் மற்றும் உறவினர்கள் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலையில் உயிரிழந்தார். அந்த பெண்ணின் உறவினர்கள் ரூ.2 லட்சம் நஷ்டஈடு கேட்டதாகவும், ஆனால் அவ்வளவு பணம் தன்னால் தர இயலாது என்று கூறியதால் மண்எண்ணெய் ஊற்றி எரித்ததாக, ராஜூ விஸ்வகர்மா தனது மரண வாக்குமூலத்தில் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக