வெள்ளி, 6 செப்டம்பர், 2013

சதா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் !

ஜெயம்',' பிரியசகி', 'உன்னாலே உன்னாலே' போன்ற
படங்களில் நடித்து புகழ்
பெற்றவர் நடிகை சதா. சமீபகாலமாகத் திரைப்படங்களில் தலைகாட்டாத இவர், விரைவில் வெளியாகவிருக்கும் 'மத கஜ ராஜா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். விஜய் ஆண்டனியின் இசையில் நடிகர் விஷாலுடன் இணைந்து இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் அவர் தோன்றுகின்றார். இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஷாலுடன் நடிகைகள் அஞ்சலி, வரலக்ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் சோனு சூட், பிரகாஷ் ராஜ், சுப்பாராஜூ மற்றும் நிதின் சத்யா போன்றோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக