திங்கள், 30 செப்டம்பர், 2013

நீதிமன்றம் : லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி ! தண்டனை விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று பேசப்படுகிறது.   ராஞ்சி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தாம் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த உடனேயே ராஞ்சி மத்திய சிறையில் சரண்டைந்தார் லாலு பிரசாத் யாதவ். அவருக்கான தண்டனை விவரம் வீடியோகான்பரன்ஸ் மூலம் வரும் 3-ந் தேதி தெரிவிக்கப்பட இருக்கிறது. ரூ37.7 கோடி தீவன ஊழல் வழக்கில் லாலு உள்ளிட்ட 45 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு வெளியான உடனேயே நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறைக்கு சென்று சரணடைந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராஞ்சி சிறையில் சரணடைந்தார் லாலு! வீடியோ கான்பரன்ஸ் மூலம் தண்டனை அறிவிப்பு! தற்போது சிறையில் அடைக்கப்பட்ட லாலுவுக்கான தண்டனை விவரம் வரும் 3-ந் தேதியன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தெரிவிக்கப்படும். மேலும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக லாலுவின் மகன்களில் ஒருவரான தேஜஸ்வி கூறியுள்ளார். மேலும் பாரதிய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் சதியாலேயே லாலு பிரசாத் மீது வழக்கு தொடரப்பட்டதாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக