திங்கள், 30 செப்டம்பர், 2013

இந்தி திரையுலக பணக்கார அழகு ராணி ஜூகி சாவ்லாதான்



ந்தி திரையுலகில் நிலைத்த இடம்
பெற்ற அழகு ராணிகளுள் ஒருவர், பிரபல நடிகை ஜூகி சாவ்லா. பார்ப்பதற்கு ரொம்ப எளிமையாகக் காட்சியளித்தாலும் இவர் பணத்திலும் ‘ராணி’தான்.
இதோ, இந்த விவரங்களைப் பாருங்கள்...
வீடு: மும்பையின் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் அல்டமவுன்ட் ரோட்டில், பரந்து விரிந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார், ஜூகி. இவர்களுக்கு முகேஷ்– டினா அம்பானி பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றால் புரியும். ஜூகியின் கணவர் ஜெய் மேத்தாவுக்கு அவர் பிறந்த தேசமான உகாண்டாவில் ஒரு பிரம்மாண்ட மாளிகை இருக்கிறது.
குடும்பத் தொழில்: ஜூகியின் கணவர் ஜெய் மேத்தாவுக்குச் சொந்தமான மேத்தா குழுமத்தின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ. 1909 கோடி! அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, கென்யா, உகாண்டாவில் இந்தக் குழுமத்தின் கிளைகள் விரிந்திருக்கின்றன. ஜூகியும், ஜெய்யும் ஐ.பி.எல். அணியான ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸின்’ பங்குதாரர்களும் கூட. (இந்த அணியின் இன்னொரு பங்குதாரர், ஷாருக்கான்!)பிடித்த பிராண்டுகள்:
ஜூகி வழக்கமாக இந்திய ஆடைகளையே விரும்பி அணிவார். ஆனால் அவை, முன்னணி வடிவமைப்பாளர்களான விக்ரம் பட்னிஸ், அனிதா டோங்ரே, பிரீத்தி எஸ். கபூர் ஆகியோர் ஜூகி சாவ்லாவுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைத்தவையாக இருக்கும். விக்ரம் அல்லது அனிதா வடிவமைக்கும் சல்வார் சூட்கள் ஜூகிக்கு மிகவும் பிடித்தவை.
விளம்பரத் தூதர்: திரையுலகில் இருந்து வெகுவாக விலகிவிட்டாலும், இன்றும் விளம்பரங்களில் ‘பிசி’யாக இருக்கிறார், ஜூகி.
பிரபலமான நிறுவனங்களுக்கும், வங்கிக்கும் விளம்பர தூதராக இருக்கிறார்.
கார்: எல்லா மெர்சிடிஸ் கார் மாடலும் ஜூகி சாவ்லாவுக்கு பிடிக்கும். ஆனால் இவர் ஆசையோடு ஓட்டிச் செல்வது, ‘ரேஞ்ச் ரோவர்’ காரை. அதை, ‘தனது நகரும் வீடு’ என்று பெருமையாகக் கூறுகிறார், ஜூகி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக