ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

சுஷ்மா ஸ்வராஜ் : வயது வித்தியாசம் பார்க்காமல் தண்டனை வழங்க வேண்டும் ! அந்த சிறுவனின் குற்றம் மன்னிக்க முடியாதது

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு, நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதுகுறித்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கருத்து வெயிட்டார்.
அவர் கூறுகையில், இதுபோன்ற கடுமையான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு வயது வித்தியாசமின்றி தண்டனை வழங்க வேண்டும். இந்த வழக்கில் இளம் குற்றவாளிக்கான 3 ஆண்டு சிறை தண்டனை என்பது மிகவும் குறைவு. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யவுள்ளதாகவும், அதில் குற்றவாளியின் வயதை கணக்கிடாமல் குற்றத்தின் தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாகவும்தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக