ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

கலைஞர் காங்கிரசுக்கு : சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டால் நாங்களும் உங்களை கைவிட்டு விடுவோம் ! Ultimatum?

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பொன்விழா ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் கலைஞர்,
திருமாவளவன் அயோத்திதாசர் பண்டிதரைப்போல நீண்ட ஆயுளும், புகழும் பெற்று வாழவேண்டும். தமிழகத்தை வளம்கொழிக்கச் செய்யும் சேது சமுத்திரத்திட்டத்தை மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். சேது சமுத்திரத் திட்டத்தை கைவிடாதீர்கள். அதனை நிறைவேற்றுங்கள். அதனை நிறைவேற்றுகின்ற வரையில் நாங்கள் காத்திருப்போம். கைவிட்டுவிட்டால், நாங்களும் உங்கள் கையை விட்டுவிடுவோம். பயமுறுத்தவில்லை. பாசத்தின் காரணமாக விடுக்கின்ற எச்சரிக்கை.
இந்த திட்டத்தை நிறைவேற்றவிடாமல் உச்சநீதிமன்றம் 
வரை செல்லும் அதிமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக