வியாழன், 1 ஆகஸ்ட், 2013

விக்கிலீக்ஸ்க்கு அமெரிக்க ரகசியம் Leak செய்த பிராட்லி மேன்னிங்கிற்கு 136 ஆண்டுகள் சிறை

வாஷிங்டன் : அமெரிக்க ராணுவத்தின் ரகசியத்தை விக்கிலீக்ஸ்
இணையதளத்திற்கு தெரிவித்தது உள்பட பல வழக்குகளில் முன்னாள் ராணுவ அதிகாரிக்கு 136 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏ, உலகம் முழுவதும் உள்ள இணையதளங்களில் ரகசியமாக ஊடுருவி தகவல்களை திரட்டியதாக அதன் முன்னாள் அதிகாரி ஸ்நோடென் தெரிவித்தார். இதனால் அவரை அமெரிக்கா கைது செய்ய நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, அவர் மாஸ்கோவில் தஞ்சம் அடைந்தார். ஏற்கனவே விக்கிலீக்ஸ் இணைய தளம் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை கைது செய்ய அமெரிக்கா மறைமுக முயற்சிகளை மேற்கொண்டதை அடுத்து விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்க ராணுவ ரகசியங்களை தெரிவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டின்பேரில் ராணுவ அதிகாரி பிராட்லி மேன்னிங் என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.


பிராட்லி மீது ராணுவ ரகசியங்களை கசிய விட்டது, எதிரிக்கு உதவியது உள்பட 21 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதில் 19 குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டார். பிராட்லி தனது கூட்டாளி டேனியல் எல்ஸ்பெர்க் என்பவருடன் இணைந்து 1970ல் நடந்த வியட்நாம் போரின் போது அமெரிக்கா செய்த தகிடுதத்தங்களை பென்டகனில் இருந்து சுருட்டிய ஆவணங்களை விக்கி லீக்ஸ் மூலமாக வெளியுலகிற்கு தெரிவித்தார்.

25 வயது இளைஞரான பிராட்லி மேன்னிங்கை கைது செய்து ராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தியது. இவரது வழக்கில் 16 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் அவருக்கு 136 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக