வியாழன், 1 ஆகஸ்ட், 2013

மணல் மாபியாவுக்கு எதிரான பெண் IAS பதவி இடைநீக்கம் ! உபி அரசின் சுயரூபம்

லக்னோ : உ.பி.,யில், மணல் மாபியாக்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை
உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, கவுதம புத்தா நகர் பகுதியில், துர்கா சக்தி நக்பால், 28, என்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, 10 மாதங்களுக்கு முன், உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். பதவியேற்றதுமே, கவுதம புத்தா நகர் பகுதியில், நீண்ட காலமாக அராஜகத்தில் ஈடுபடும், மணல் மாபியாக்கள் மீது, அதிரடி நடவடிக்கை எடுத்தார். மணல் மாபியாக்களை, கைது செய்து, உள்ளே தள்ளினார். இதனால், துர்காவுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்தினம், உ.பி., மாநில அரசு, துர்காவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. மணல் கொள்ளை எல்லாம் இங்கே யாரும் கண்டு கொள்வதில்லை.. எல்லாம் கூட்டுக் கொள்ளை அமோகமாக நடக்கிறது.. ரொம்ப நல்லவரு அகிலேஷ்.. அந்தம்மாவை அங்கே வெறும் சஸ்பெண்டு தான் செய்திருக்கிறார்கள்... இங்கேன்னா, அந்த கலெக்டர் மேலே என்னைக்கோ மணல் லாரியை ஏத்தியிருப்பாங்க...

இந்நிலையில் துர்கா மீது உ.பி. அரசு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. மேலும் துர்கா மீது வழிபாட்டு தலத்தின் சுவரை, எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமலும், முறையான விதிமுறைகளை பின்பற்றாமலும், இடிக்க உத்தரவிட்டதாக வழக்கு தொடரப்பட்டு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், இது குறித்து அவர் 10 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. உ.பி., மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு, பா.ஜ., - காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி துர்கா விவகாரம் மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை வரை சென்றுவிட்டது. இது குறித்து உரிய அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதான நடவடிக்கை குறி்த்து, உபி. அரசின் விவகாரங்களில் தலையிட முடியாது. எனினும் தவறு நடந்திருந்தால், அம்மாநில அரசுடன் பேச்சு வார்‌த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதுகுறித்து அம்மாநில அமைச்சர் சிவபால் யாதவ் கூறுகையில், , துர்கா நிர்வாகத்திற்குட்பட்ட கவுதமபுத்தா நகரில் மணல்கொள்ளை அவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குவாரிகளில் நடக்கவே இல்லை, அவரது அறிக்கை தவறானது என்றார்.
எடுத்த, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதால், மத்திய அரசு தலையிடும் அளவிற்கு சென்றுவிட்டது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக