வியாழன், 1 ஆகஸ்ட், 2013

ஆற்றங்கரையில் கண்டெடுத்த இரட்டை குழந்தைகள் ! தஞ்சையில் அக்கிரமம்

அதிராம்பட்டினம்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த கருங்குளம்
கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். இன்று காலை 6 மணிக்கு நசுவினி ஆற்றங்கரைக்கு சென்றார். ஆற்றின் மேற்கு கரையில் ஒரு பாலிதீன் பை கிடந்தது. அந்த பை சற்று பெரிதாக இருந்ததால் சந்தேகமடைந்த ராஜலிங்கம் அந்த பையை எடுத்து பார்த்தார்.பைக்குள் ஒரு போர்வையில் சுற்றிய நிலையில் இரட்டை  குழந்தைகள் உயிரோடு இருந்தன. அதில் ஒன்று ஆண், இன்னொன்று பெண்.  குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டதும் அழத்தொடங்கியது. குழந்தைகளின் தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் இன்று அதிகாலை அங்கு கொண்டு வந்து வீசப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த கிராமமே அங்கு திரண்டு  வந்து வேடிக்கை பார்த்தது. அதிராம்பட்டினம் போலீசார் விரைந்து  வந்து  108 ஆம்புலன்சில் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த குழந்தைகளை வீசியது யார், ஏன் வீசினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக