ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

சென்னையில் நவீன சுயம்வரம் நிகழ்ச்சி: மணமகன்–மணமகள்கள் திரண்டனர்

சென்னை, ஆக. 18– சென்னையில் நடந்த நவீன சுயம்வரம் நிகழ்ச்சியில்
மணமகன்–மணமகள்கள் திரண்டனர். உலக வள்ளுவர் குல சங்கம் சார்பில் சென்னை சூளைமேடு சமுதாய நலக்கூடத்தில் நவீன சுயம்வரம் நிகழ்ச்சி இன்று நடந்தது. டாக்டர் எஸ்.ஆனந்தன் தலைமை வகித்தார். தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி பி.ஜோதி மணி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த வள்ளுவர் குல மணமகன், மணமகள்கள் 700 பேர் கலந்து கொண்டனர். சுயம்வரத்தில் கலந்து கொண்ட மணமகன், மணமகள்கள் தங்கள் சுய விபரம் குறித்து அங்கு அமைக்கப்பட்ட சிறப்பு கவுண்டர்களில் பதிவு செய்தனர்.
பின்னர் மேடையில் ஏறி தங்கள் படிப்பு, வேலை, வரன் பற்றி அறிமுகம் செய்து கொண்டனர்.
தனியார் நிறுவனத்தில் ரூ.35 ஆயிரத்தில் பணிபுரியும் உலகநாதன் என்ற மணமகன் கூறியதாவது:–
நான் லிஸ்டர் மெட்ரோ பாலிஸ் என்ற தனியார் ஆய்வகத்தில் மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் பணி புரிகிறேன். எனக்கு தகுதி வாய்ந்த நன்கு படித்த மணமகள் மனைவியாக கிடைத்தால் அவளை கண்கலங்காமல் பார்த்துக் கொண்டு குடும்பம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐஸ்வர்யா (வயது20) கூறியதாவது:–

நான் பி.பி.ஏ. படித்துள்ளேன். எனக்கு பட்டப்படிப்பு படித்த சிறந்த சம்பளத்தில் பணிபுரியும் நன்கு அழகுள்ள மணமகன் கணவராக அமைய வேண்டுகிறேன்.
எனது தந்தை ராஜசேகர் சவுதி அரேபியாவில் போர்மேனாக பணிபுரிகிறார். எங்களது வசதி வாய்ப்புக்கு ஏற்ற மணமகனை தேடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மணிமேகலை (வயது29) கூறியதாவது:–
நான் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளேன். எனக்கு முதுகலை பட்டபடிப்பு படித்த பணிபுரியும் மணமகன் தேவை. என்னை கண் கலங்காமல் பார்த்து கொள்பவராக அவர் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுயம்வரம் நிகழ்ச்சியை உலக வள்ளூவர் குல சங்க நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் மணிலால், தேவராஜன், சுகுமார், ராஜரத்தினம், அருணா ராமகிருஷ்ணன், புஷ்பநாதன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக